மோசடி பத்திரப்பதிவுகளை ரத்து செய்ய பதிவாளருக்கு அதிகாரம் அளிக்கும் சட்டத் திருத்தம் அமலுக்கு வந்தது…

சென்னை: தமிழகத்தில் மோசடி பத்திரப்பதிவுகளை ரத்து செய்வதற்கான அதிகாரத்தை பதிவு அலுவலர்களுக்கு வழங்கும் வகையிலான சட்டம் அமலுக்கு வந்துள்ளது. இந்த மசோதா தொடர்பாக 2021ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழக சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில், குடியரசு தலைவர் ஒப்புதல் கிடைத்தைத் தொடர்ந்து, இன்று அமலுக்கு வந்துள்ளது.

குறிப்பிட்ட  நபருக்கு தெரியாமல், அவரது சொத்தை இன்னொரு மற்றொரு நபர், போலியான பத்திரங்கள் மூலம், வேறு பெயர்களில் பதிவு செய்து அபகரிப்பது போன்ற மோசடிகள் தொடர்கிறது. இதற்கு பதிவுத்துறை அலுவலர்கள், அரசியல்வாதிகள், தரகர்கள் துணைபோகின்றனர். இதனால் ஏராளமானோர் பாதிக்கப்படு கின்றனர். இதுதொடர்பாக காவல் துறையில் புகார் அளித்து,  வழக்கு தொடர்ந்து, அது முடிவுக்கு வர பல ஆண்டுகள் ஆகிறது. இந்த நடைமுறையை தடுக்கும் வகையில்,  பதிவு சட்டத்தில் திருத்தம் செய்யும் மசோதா கடந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு மத்தியஅரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த   சட்டத்தால் தடைசெய்யப்பட்ட பத்திரங்களை குறிப்பாக,பொய்யான பத்திரம், நடைமுறையில் உள்ள சட்டங்களால் தடைசெய்யப்பட்ட பத்திரங்கள், அரசால் இணைக்கப்பட்ட ஆவணங்கள் ஆகியவற்றைபதிவு செய்ய, பதிவு அலுவலர் மறுக்கவேண்டும். பதிவுச்சட்ட விதிகளில் 22ஏமற்றும் பி ஆகிய பிரிவுகளுக்கு முரணாக பத்திரப்பதிவு நடைபெற்றுள்ளது என்று பதிவாளர் கருதினால், அந்த பதிவை ஏன் ரத்து செய்யக் கூடாது என்று கேட்டு அறிவிப்பு வழங்க வேண்டும். அதற்காக பதில் பெறப்பட்டால், அதை கருத்தில் கொண்டு பதிவாளர் ஆவணப்பதிவை ரத்து செய்யலாம். பதிவுத்துறை தலைவருக்கும் இந்தஅதிகாரம் உண்டு.

பதிவு அலுவலர் முறைகேடானபதிவுகளை செய்தால், பதிவு அலுவலருக்கு மூன்றாண்டுகள் வரை சிறைதண்டனை அல்லது அபராதம் அல்லதுஇரண்டும் சேர்த்து விதிக்கப்படும் என்று அந்த சட்டத்திருத்த மசோதாவில் குறிப்பிடப் பட்டிருந்தது.

மோசடி பத்திரங்களை, மாவட்ட பதிவாளர்களே ரத்து செய்யும் வழிமுறைகளுக்காக, பதிவு சட்டத்தில், ஐந்து பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன.

இந்த மசோதா, ஆளுநர் மூலம் குடியரசுத்தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டிருந்தது. இந்நிலையில், மோசடி பதிவுகளை ரத்து செய்ய பதிவாளருக்கு அதிகார மளிக்கும் மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். இதை யடுத்து, இந்த சட்டத்திருத்தம் செப்டம்பர் 16ந்தேதி (நேற்று) முதல்  அமலுக்கு வந்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.