பிரித்தானிய காதலனால் விரட்டியடிக்கப்பட்ட உக்ரைனிய காதலி கைது., மீண்டும் தன்னுடன் வருமாறு கதறல்


பிரித்தானிய காதலரின் கதவை உதைக்க முயன்ற உக்ரைன் அகதி கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்படும்போது ​​”ஐ லவ் யூ டோனி” என்று கத்தினார்.

தனது பிரித்தானிய காதலனால் தூக்கி எறியப்பட்ட உக்ரேனிய அகதி ஒருவர், அவரது வீட்டின் முன் கதவை உதைக்க முயன்றதால் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

பிரித்தானியாவில் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு, அகதியாக நாட்டுக்கு வந்த உக்ரைனிய பெண் மீது காதல் கொண்டு, மனைவியை கைவிட்டதற்காக பிரபலமாக அறியப்பட்டவர் டோனி கார்னெட் (30).

உக்ரைனிய அகதியான 22 வயது சோபியா கர்கடிம் மீது காதல் கொண்டு, அவர் தனது 10 வருட துணைவி லோர்னாவையும் (28) அவரது இரண்டு குழந்தைகளையும் கைவிட்டு விட்டு வெளியேறி புதிய காதலியுடன் புதிய வீட்டில் குடியேறினார்.

பிரித்தானிய காதலனால் விரட்டியடிக்கப்பட்ட உக்ரைனிய காதலி கைது., மீண்டும் தன்னுடன் வருமாறு கதறல் | Ukrainian Refugee Arrested After Lover Dumbed Uk

ஆனால், இரு திங்களுக்கு முன், தனது உக்ரைனிய காதலி சோபியா கர்கடிமுடனான தனது உறவு முடிந்துவிட்டது என்றும், கடந்த சனிக்கிழமை ஒரு வாக்குவாதத்திற்குப் பிறகு அவருடன் 100 சதவீதம் முடிவடைந்துவிட்டது என்றும் கூறினார்.

இதற்குமேல் அவரை தாங்கிக்கொள்ளமுடியாது என்று தனது வீட்டைவிட்டு விரட்டியடித்ததாக கூறினார்.

டோனி அவர்களின் நான்கு மாத உறவு முடிந்துவிட்டதாக செய்தி வெளியிட்ட சிறிது நேரத்திலேயே சனிக்கிழமை இரவு அதிகாரிகளை அழைத்து சோபியா கைது செய்யப்பட்டார்.

ஆரம்பத்தில் அவர்கள் பகிர்ந்திருந்த வீட்டை விட்டு வெளியேறிய பிறகு, ​​சிறிது நேரத்தில் சோஃபியா மீண்டும் வீட்டுக்கு வந்துள்ளார். அவர் டோனியை வெளியில் நின்று திட்டியதால் அக்கம்பக்கத்தினர் கோவபமடைந்து எச்சரித்தனர்.

பிரித்தானிய காதலனால் விரட்டியடிக்கப்பட்ட உக்ரைனிய காதலி கைது., மீண்டும் தன்னுடன் வருமாறு கதறல் | Ukrainian Refugee Arrested After Lover Dumbed Uk

ஆனால், கத்திக்கொண்டே இருந்த அவர் டோனியின் வீட்டின் முன் கதவை உதைத்து உடைக்க முயன்றுள்ளார். இதனால் கடுப்பான டோனி விரைவாக பொலிசாருக்கு போன் செய்தார்.

பிரச்சினை செய்த சோபியா வெட்டுமென்றே தோட்டச் சுவரில் ஏறியுள்ளார், பின்னர் அருகிலுள்ள புதர்களில் மறைந்திருந்தாள்ர்.

சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார் அவரை கண்டுபிடித்து கைது செய்தனர். அதிகாரிகள் அழைத்துச் செல்லும்போது “டோனி, ஐ லவ் யூ. தயவு செய்து என்னுடன் வாருங்கள்” என்று கூச்சலிட்டார்.

அவர் குற்றஞ்சாட்டப்படாமல் விடுவிக்கப்படுவதற்கு முன்பு, விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டாள். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.