உத்தரப்பிரதேச மாநிலம், காசியாபாத்தில் உள்ள ஓர் வீட்டில் எல்.இ.டி டி.வி வெடித்ததில் 16 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்தார். அவர் தாய், சகோதரர் மற்றும் நண்பர் என மூவர் இந்த விபத்தில் காயமடைந்ததாகக் கூறப்படுகியது. இது தொடர்பாக அண்டைவீட்டாரான வினிதா கூறுகையில், “பலத்த சத்தம் கேட்டது. சிலிண்டர் வெடித்து விட்டது என்று நினைத்தேன். அதனால், எங்கள் வீட்டிலிருந்து நாங்கள் அனைவரும் வெளியே ஓடி வந்தோம். அதன்பிறகே பக்கத்து வீட்டிலிருந்து புகை வருவதைக் கண்டோம்.”
A 16-year-old teen died after an LED TV exploded at his house in Uttar Pradesh’s Ghaziabad. His mother, sister-in-law and a friend were injured. pic.twitter.com/hnhMa4KOdA
— Ahmed Khabeer احمد خبیر (@AhmedKhabeer_) October 4, 2022
இந்தச் சம்பவம் தொடர்பாக ஊடகங்களிடம் பேசிய காவல்துறை அதிகாரி, “இந்த விபத்தில் எல்.இ.டி டி.வி வெடிப்பு மிகவும் பலமாக இருந்திருக்கிறது. இந்த வெடிப்பால் கான்கிரீட் சுவரின் ஒரு பகுதி இடிந்து விழுந்திருக்கிறது, இது அக்கம் பக்கத்தினரிடையே பீதியை ஏற்படுத்தியது. ஓமேந்திரா என்ற அந்தச் சிறுமியின் முகம், மார்பு, கழுத்தில் வெடி விபத்தால் பலத்த காயங்கள் ஏற்பட்டிருக்கின்றன. மருத்துவ சிகிச்சை பலனில்லாமல் அவர் இறந்துவிட்டார். மற்ற குடும்ப உறுப்பினர்கள் சிகிச்சை பெற்றுவருகிறார்கள்.

இது தொடர்பாக வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம்” என்றார்.