பாட்னா: தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர் கடந்த 2018 ம் ஆண்டு பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் சேர்ந்தார். இதன் பின்னர் கட்சியில் இருந்து அவர் நீக்கப்பட்டார். தற்போது பீகாரில் பாத யாத்திரை மேற்கொண்டு வரும் பிரசாந்த் கிஷோர் பேசுகையில், ‘‘கடந்த 2015ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற நிதிஷ்க்கு நான் உதவி செய்தேன். இன்று எனக்கு அறிவுரை வழங்கும் அளவுக்கு அவருக்கு மன உறுதி இருக்கிறது. நாடு முழுவதும் எனது திறமையை நிரூபித்த பின் என் சொந்த மாநிலத்தில் வேலை செய்ய முயற்சிக்கிறேன். 10 நாட்களுக்கு முன்பு நிதிஷ் குமார் என்னை அவரது வீட்டுக்கு அழைத்தார். அப்போது தனது கட்சியை வழிநடத்தும்படி என்னிடம் கேட்டார். ஆனால் அது சாத்தியமில்லை என்று நான் சொல்லி விட்டேன்’’ என்றார்.
