தற்போதைய பல்கலைக்;கழக அவல நிலைமைகளைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கான பங்களிப்புக்களை வழங்குவது அரசாங்கத்தின் கடமை என உயர் கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த நேற்று (05) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
“பல்கலைக்கழகத்துக்குள் அடிப்படைவாதம் பாசிசவாதம் உள்ளிட்ட பல முறையற்ற செயற்பாடுகளும் தற்போது இடம்பெறுகின்றன.பல்கலைக்கழகத்தின் முதலாம் ஆண்டு மாணவன் கைக்கடிகாரம் அணிந்து
கொண்டு பல்கலைக்கழகத்துக்கு வரக் கூடாது. முதலாம் ஆண்டு மாணவி சீத்தை துணியிலான ஆடை அணிய வேண்டும். காதணி, மாலை ஆகியவற்றை அணியக் கூடாதென சில மாணவர்கள் பகிடிவதைகள் ஈடுபடுவதாக” பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் தெரிவித்தார்.
இது தொடர்பாக உயர் கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த மேலும் விபரிக்கையில்:
அண்மையில்; பேராதனைப் பல்கலைக்கழக மாணவன் ஒருவர் காணாமல் போனதாகக் கூறப்பட்டது, பின்னர் மற்றொரு மாணவனும் காணாமல் போயுள்ளதாகக் கூறப்பட்டுள்ளதுடன்;, பேராதனைப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடப் பீடாதிபதிக்கு விடுக்கப்பட்டுள்ள மரண அச்சுறுத்தல் தொடர்பாக இன்றைய தேசிய பத்திரிகைகளில் தலைப்புச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
நாட்டின் பல்கலைக்கழக வரலாற்றில் பல அவலங்கள் இடம்பெற்றுள்ளன. 2019ஆம் ஆண்டின் பின்னர் பல்கலைக்கழகங்களுக்கான உயர்கல்வி வாய்ப்பை விருத்தி செய்யும் திட்டத்தின் கீழ் பத்தாயிரம் மாணவர்கள் உள்வாங்கப்பட்டார்கள். சபரகமுவ பல்கலைக்கழக வைத்திய பீடம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், மொறட்டுவ பல்கலைக்கழகத்திலும் வைத்திய பீடத்தை ஆரம்பிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பல்கலைக்கழகக் கல்வியைப் பரவலாக்குவதற்கான செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உள்நாட்டின் 17அரச பல்கலைக்கழகங்களும் வெளிநாட்டின் முதற்தரப் பல்கலைக்கழகங்களுடன் இணைந்து பரஸ்பர கல்வி செயற்பாடுகளில் ஈடுபடவுள்ளன.
அத்துடன் பேராசிரியர்கள், கலாநிதிகள், பீடாதிபதிகள், விரிவுரையாளர்கள், மற்றும் பல்கலைக்கழகம் சார்ந்த அனைவரும் சுதந்திரமாக விரிவுரை மற்றும் பல்கலைக்கழக நடவடிக்கைகளில் ஈடுபடலாம், அரசாங்கம் என்றும் அவர்களின் பல்கலைக்கழக செயற்பாடுகளில் இடையூறு செய்வதில்லை என்றும் உயர் கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த மேலும குறிப்பிட்டார்.
மாணவர்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு ஊடக இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார கோரிக்கை
குருணாகல் மாவட்டத்திலுள்ள சில பெற்றோர் நேற்று இரவும் இன்று காலையிலும் தனக்கு தொலைபேசி அழைப்பு விடுத்து, தமது பிள்ளைகள் பல்கலைக்கழகங்களில் படித்துக்கொண்டிருப்பதாகவும் தற்போது பல்கலைக்கழகங்களில் தோன்றியுள்ள அவல நிலை தொடர்பாக தாம் அச்சப்படுவதாகவும் அவர்கள் அங்கலாய்ப்பதாகவும் நேற்று (05) பாராளுமன்றத்தில் ஊடக இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார பல்கலைக்கழக அவலம் பற்றி உயர் கல்வி அமைச்சர் மற்றும் கல்வி இராஜாங்க அமைச்சர் ஆகியோரின் அவதானத்திற்குக் கொண்டு வந்தார்;.
ஏழைப் பெற்றோர்களின் பிள்ளைகள் தான் இலவசக் கல்வித் திட்டத்தின் கீழ் அரச பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கின்றனர். அவர்களுக்கு புதிய பகிடிவதை ஒரு பக்கமும் பலவந்தமாக இம்மாணவர்களை அரசியல் கூட்டங்களில் பங்கேற்கச் செய்வது மறுபக்கமும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
ஒரு மாணவர் கொலை செய்யப்பட்டுள்ளார் மற்றொரு மாணவர் காணமல் போயுள்ளார். இவ்வாறான நிலையில் மாணவர்கள்; பாரிய அழுத்ததத்திற்கு முகம் கொடுத்து வருதாகவும், இது தொடர்பில் விசேட கவனம் செலுத்துமாறும் மாணவர்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும் ஊடக இராஜாங்க அமைச்சர் கோரிக்கைவிடுத்தார்.
ஒரு வீதத்திற்கும் குறைவான மாணவர்களின் மனித உரிமை பற்றித்தான் பேசப்படுகின்றது
மனித உரிமைகள் பற்றி பல்கலைக்கழக மாணவர்களுடன் தொடர்புபடுத்திக் கோஷங்கள் எழுப்பப்ட்டாலும் ஒரு இலட்சத்து நாற்பத்தையாயிரம் மாணவர்களில் ஒரு வீதத்திற்கும் குறைவான மாணவர்களின் மனித உரிமை பற்றித்தான் பேசப்படுகின்றது. 99 வீதமான மாணவர்களின் உணவு கொண்டு செல்வதற்கான சுதந்திரம் தடுக்கப்படுதல் முதல், அனைத்து மனித உரிமைகளும் மறுக்கப்பட்டால் அதற்கெதிரான நடவடிக்கை மேற்கொள்வது அரசாங்கத்தின் கடமையாவதுடன், எதிர் கால சமூகத்திற்கு அரசியல் தீயை மூட்டாதிருப்பது இப்பாராளுமன்றத்தின் கடமையுமாகும் என உயர் கல்வி இராஜாங்க அமைச்சர் கலாநிதி சுரேன் ராகவன் விவரித்தார்.
அறிவானவர்களிடம் கல்வியைப் பெறுவதற்காக மாணவர்களை அனுப்புமாறு பெற்றோர்கள் மற்றும் வரி செலுத்துபவர்களிடம் அவர் வேண்டிக்கொண்டார். மாணவர்களின் மனித உரிமை மட்டுமல்ல பேராசிரியர்கள், கலாநிதிகள், விரிவுரையாளர்களின் மனித உரிமைகளும் தற்காலத்தி;ல் நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலையில் பாதுகாக்கப்பட வேண்டியுள்ளதாக உயர் கல்வி இராஜாங்க அமைச்சர் கலாநிதி சுரேன் ராகவன் மேலும் தெளிவுபடுத்தினார்.
பல்கலைக்கழகங்களுக்காகப் பாதுகாப்புக்கள் வழங்கல் – பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்
‘இ;ந்த பல்கலைக்கழக பீடாதிபதியை வீட்டிற்கு அனுப்புவது கோதாவை வீட்டிற்கு அனுப்பிய எமக்கு ஒன்றும் பெரிய காரியம் அல்ல’ என மாணவர்கள் கோஷமிடுவதாகப் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாக சகல சிங்கள தேசிய செய்தித்தாள்களும் (05) செய்தி வெளியி;ட்டிருக்கின்றன என இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்தார்;.
எதிர்க் கட்சித்தலைவர் ஜனநாயக சுதந்திரத்தைக் கேட்கின்றார். ஆனால் இம்மாணவர்கள் தீவிரவாதத்தையும் பாதாள உலகத்தையும், பாசிசவாதத்தையும், அச்சுறுத்தலையும் தான் உருவாக்குகிறார்கள். முதலாம் வருட மாணவர்கள் கடிகாரம் அணிந்தால் காலைக்கட்டுகிறார்கள், மாணவிகள் செருப்பு, காதணி அணிய முடியாது, சீத்தை துணியில் தான் சட்டை அணிய வேண்டும். இது ஒரு பாரிய அவலம். ஜனநாயகம் பற்றி பல கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஜனாநாயக சுதந்திரம் என்பது ஊர்வலம் சென்று, தீ ஏற்றி, கை தட்டி, கோஷமிட்டு பொலிஸ் கலைக்கும் போது கைதாகிப் பிணையில் வருவதல்ல. சமாதானம், பாதுகாப்பு, நீதி, எதுவுமே பல்கலைக்கழக மாணவ சமூகம் கருத்திற் கொள்ளவில்லை என ஆதங்கத்தை முன்வைத்தார்.
அதனால் நாட்டிலுள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களின் பேராசியரியர்கள், கலாநிதிகள், விரிவுரையாளர்கள், மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழகம் சார்ந்த அனைவருக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டிய பொறுப்பு தமக்கு உள்;ளதாக இராஜாங்கப் பாதுகாப்பு அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் மேலும் தெரிவித்தார்.