ஆதிமனிதன் தன்னை எப்போதாவது மனிதன் என்று கூறிக்கொண்டானா? கமலுக்கு நடிகை கஸ்தூரி கேள்வி

சென்னை: நடிகர் கமலை நடிகை கஸ்தூரி கலாய்த்து டிவிட்பதிவிட்டுள்ளார். அதில், ஆதி மனிதன் தன்னை எப்போதாவது மனிதன் என்று கூறிக்கொண்டானா என கேள்வி எழுப்பி உள்ளார்.

தமிழ்நாட்டில் இந்து மதம் குறித்து ஆளாளுக்கு பேசி வருவது சர்ச்சையாகி வருகிறது. சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தைத் தொடர்ந்து, இந்த விவகாரம் மேலும் சூடுபிடித்துள்ளது.

ராஜராஜ சோழனை இந்து அரசனாக்க முயற்சிக்கிறார்கள் என வெற்றிமாறன் கூறியதை அடுத்து இந்த விவகாரம் விவாதப்பொருளாக மாறி வருகிறது.  இது குறித்து நடிகர் கருணாஸ், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்பட பலர் தங்களது கருத்துக்களை தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது

இதுதொடர்பாக ஊடகம் ஒன்றுக்கு நடிகர் கமல்ஹாசன்  அளித்த பேட்டியில் ராஜராஜ சோழன் காலத்தில் இந்து மதமே இல்லை என்று கூறியிருந்தார்.  ஆங்கிலேயர்கள் இந்து மதம் என பெயர் வைத்தார்கள் என்றும் தெரிவித்துள்ளார்

கமல்ஹாசனின் இந்த கருத்து குறித்து நடிகை கஸ்தூரி தனது டிவிட்டரில் கேள்வி எழுப்பி உள்ளார்.

கமல் ஒரு encyclopedia. அவர் தன் அறத்தையும் அறிவாற்றலையும் அரசியல் narrative காக சமரசம் செய்து கொள்வது வருத்தம் .  ஆதி மனிதன் தன்னை ஒரு போதும் மனிதன் என்று கூறி கொண்ட வரலாறு எதுவும் இல்லை. அந்த காலத்தில் homo sapiens என்ற பேரே இல்லை. so அவன் மனிதனே இல்லை என்பது என்ன வாதம்?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.