ஆளுநர் பங்கேற்ற நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிப்பு… மத்திய அரசின் திட்டமிட்ட செயலா?

’21 ஆம் நூற்றாண்டின் உயர்கல்விக்கு மாணவியரைத் தயார்படுத்துதல்’ என்ற தலைப்பிலான கருத்தரங்கம், வட கோவை பகுதியில் உள்ள அவினாசிலிங்கம் பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற்றது.

இதில் தெலங்கானா மற்றும் புதுச்சேரி மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பங்கேற்று கருத்தரங்கை துவக்கி வைத்தார். இதுபோன்ற பல்கலைக்கழக, கலலூரி விழாக்களின் துவக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுவது வழக்கம்.

ஆனால் கோவை அவினாசிலிங்கம் பல்கலைக்கழகத்தில் ஆளுநர் தமிழிசை இன்று பங்கேற்ற துவக்க நிகழ்ச்சியில் தமி்ழ்த்தாய் வாழ்த்து பாடப்படவில்லை. தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிப்பட்டு தேசிய கீதம் மட்டும் பாடப்பட்டது.

உத்தரப் பிரதேச மாநில ஆளுநர் இதே பல்கலைக்கழகத்தின் நிகழ்ச்சி ஒன்றில் கடந்த வாரம் பங்கேற்றபோது கணபதி ஹோமம் நடத்தப்பட்டது மந்திரங்கள் ஓதப்பட்டன.

இதேபோன்று கடந்த ஆண்டு இறுதியில் சென்னை ஐஐடியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவிலும் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிக்கப்பட்டது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

ஆனாலும், தமிழத்தில் உள்ள மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்கள், மத்திய அரசு பிரதிநிதிகளான ஆளுநர்கள் பங்கேற்றும் பல்கலைக்கழக விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து திட்டமிட்டு தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதாக தமிழ் ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.