உ.பி.யில் டி-90 பீரங்கி பேரல் வெடித்து ராணுவ வீரர்கள் 2 பேர் உயிரிழப்பு

புதுடெல்லி: உத்தரபிரதேச மாநிலம் ஜான்சி அருகே பாபினா கன்டோன்மென்ட் பகுதி உள்ளது. இங்கு நேற்று முன்தினம் ராணுவ வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது டி-90 பீரங்கி ஒன்றின் பேரல் வெடித்ததில் 3 வீரர்கள் படுகாயம் அடைந்தனர். இவர்கள் உடனடியாக பாபினாவில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். எனினும் 2 வீரர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். ஒருவர் சிகிச்சை பெற்று வருகிறார். இவர் அபாய கட்டத்தை கடந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து ராணுவம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இறந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.