கவுஹாத்தி: இந்திய தேசிய காங்கிரஸில் ஏதேனும் சித்தாந்தம் எஞ்சியுள்ளதா?. இந்தியாவில் உள்ள ஒரே சித்தாந்த அடிப்படையிலான மற்றும் தேசிய கட்சி பாஜக மட்டும் செயல்படுகின்றது என பாஜ., தேசிய தலைவர் நட்டா கூறினார்.
பாஜ., மாநில அலுவலகத்தை திறப்பு விழா:
அசாம் மாநிலத்திற்கு மூன்று நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பா.ஜ.க.தேசிய தலைவர் ஜே.பி. நட்டா மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் சென்றனர். அங்கு இன்று(அக்.,08) கவுகாத்தியில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாஜ., மாநில அலுவலகத்தை திறந்து வைத்தனர்.
பாஜ., தேசிய தலைவர் நட்டா:

இதையடுத்து, நிகழ்ச்சியில் பா.ஜ., தேசிய தலைவர் ஜெ .பி நட்டா கூறுகையில், இந்திய தேசிய காங்கிரஸில் ஏதேனும் சித்தாந்தம் எஞ்சியுள்ளதா? இந்தியாவில் உள்ள ஒரே சித்தாந்த அடிப்படையிலான மற்றும் தேசிய கட்சி பாஜக மட்டும் செயல்படுகின்றது என்றார்.
உள்துறை அமைச்சர் அமித்ஷா:
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறுகையில், 2 முறை வெற்றி பெற்று பாஜக தனித்து ஆட்சி அமைக்கும் என்று அப்போது நினைக்கவில்லை. அசாமின் தெருக்கள் வெறிச்சோடி கிடக்கின்றன.
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், வடகிழக்கில் ஆயுதப்படை சிறப்பு சட்டத்தை அகற்ற வேண்டும் என்று ராகுல் காந்தி ஒரு நிகழ்ச்சி நிரலைக் கொடுத்தார். அது திருப்திக்காகத்தான், அவர் அப்படி கூறினார்.

என்னிடம் கேட்டபோது, முதலில் வடகிழக்கில் அமைதியை ஏற்படுத்துவோம். அதன் பின், ஆயுதப்படை சிறப்பு சட்டத்தை அகற்றுவோம். ஆனால் வெற்றி பெறுவோம் என்று சொன்னேன். திருப்திக்காக மட்டுமே இதைச் செய்ய வேண்டாம் என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement