இருவரும் வாபஸ் பெறாததால் காங்கிரஸ் தலைமை தேர்தல் திட்டமிட்டபடி நடக்கும்-மதுசூதனன் மிஸ்டரி

காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தலுக்கு சசி தரூர் மற்றும் மல்லிகார்ஜுன கார்கே இருவரும் மீட்பு மனுவை திரும்ப பெறாததால் திட்டமிட்டபடி தேர்தல் நடைபெறும் என தேர்தலை நடத்தும் குழுவின் தலைவர் மதுசூதனன் மிஸ்டரி தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து ராகுல் காந்தி கடந்த 2019 ஆம் ஆண்டு விலகியதற்கு பிறகு அக்கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா காந்தி இருந்து வருகிறார் இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் நிரந்தர தலைவருக்கான தேர்தல் நடத்த வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கையை அடுத்து தேர்தல் அறிவிக்கப்பட்டு வரும் 17ஆம் தேதி வாக்குப்பதிவும் 19ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறுகிறது.
image
களத்தில் அக்கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் சசிதரூர் ஆகியோர் உள்ளனர். வேட்பு மனுவை திரும்ப பெறுவதற்கு இன்றைய தினம் கடைசி நாள் என்பதால் இருவரில் யாரேனும் ஒருவர் மீட்பு மனுவை திரும்ப பெறுவார்களா என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இருவரும் வேட்பு மனுக்களை திரும்ப பெறவில்லை.
image
இந்நிலையில் இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த மதுசூதனன் மிஸ்டரி இருவரும் வேட்பு மனுக்களை திரும்ப பெறாததால் திட்டமிட்டபடி தேர்தல் நடைபெறும் என்று அறிவித்தார்.
நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகங்களில் 67 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டிருப்பதாகவும், காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு என்பது நடைபெறுவதாகவும், வாக்குப்பதிவு சீக்ரெட் பேலட் முறையில் நடைபெறும் எனவும் தெரிவித்தார்.
image
காங்கிரஸ் கட்சியின் பொறுப்பில் இருப்பவர்கள் வேட்பாளர்கள் இருவரில் யாருக்கும் பொறுப்பில் இருந்து கொண்டு பிரச்சாரம் செய்யக்கூடாது என்பது விதிமுறை. ஆனால் சில மாநிலங்களில் இந்த விதிமுறை மீறப்பட்டு இருப்பதாக எழுந்திருக்கும் புகார் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த மதுசூதரன் மிஸ்டரி இது தொடர்பாக எழுத்து பூர்வமாக இதுவரை எந்த புகார் தங்களிடம் வரவில்லை என்று கூறினார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.