பிரித்தானிய கடல் படுகையில் ரஷ்ய கண்ணிவெடிகள்: தீவிர ஆய்வுக்கு அமைச்சர்கள் அறிவுறுத்தல்


பிரித்தானிய கடலுக்கடியில் மின்சாரம் மற்றும் இணைய கேபிள்கள் மீது தாக்குதல்.


கண்ணிவெடிகள் இல்லாமல் இருப்பதை உறுதி செய்ய அமைச்சர் ஆய்வுக்கு முயற்சி.

ரஷ்யாவின் கடற்பரப்பு தாக்குதல் அதிகரித்து வருவதால் நீருக்கடியில் உள்ள பிரித்தானிய சக்தி மையங்கள் மற்றும் இணைய சேவை கேபிள்கள் ஆகியவற்றை ஆய்வு செய்ய பிரித்தானிய அமைச்சர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.

உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கைகளுக்கு மத்தியில், ரஷ்யாவில் இருந்து ஜேர்மனிக்கு எரிவாயு கொண்டு செல்லும் நோர்ட் ஸ்ட்ரீம் 1 மற்றும் நோர்ட் ஸ்ட்ரீம் 2 ஆகிய எரிவாயு குழாய்களில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு நான்கு கசிவுகள் கண்டறியப்பட்டது.

பிரித்தானிய கடல் படுகையில் ரஷ்ய கண்ணிவெடிகள்: தீவிர ஆய்வுக்கு அமைச்சர்கள் அறிவுறுத்தல் | Russian Mines Planted On Uk Britain S Sea BedWikimedia Commons

கசிவுகள் ஓரளவிற்கு தடுத்து நிறுத்தப்பட்டாலும், நோர்ட் ஸ்ட்ரீம் பைப்லைனில் ஏற்பட்ட இந்த கசிவு தொடர்பாக டென்மார்க் தொடர்ந்து விசாரணை மற்றும் ஆய்வை நடத்தி வருகிறது.

இதற்கிடையில் எரிவாயு குழாய்களில் ஏற்பட்ட இந்த கசிவு முறைகேடான தாக்குதல் ஏற்படுத்தப்பட்டு இருப்பதாக தெரிவித்து, ரஷ்யாவை மேற்கத்திய நாடுகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

ஆனால் இந்த குற்றச்சாட்டுக்கு ரஷ்யா முழுவதுமாக மறுப்பு தெரிவித்துள்ளது.

பிரித்தானிய கடல் படுகையில் ரஷ்ய கண்ணிவெடிகள்: தீவிர ஆய்வுக்கு அமைச்சர்கள் அறிவுறுத்தல் | Russian Mines Planted On Uk Britain S Sea Bed

இதனை தொடர்ந்து டென்மார்க் டெய்லி மெயில் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ள தகவலில், டேனிஷ் விசாரணையில் கசிவுக்கு யார் காரணம் என்று அனைவரும் உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், ஆனால் அது எப்படி செய்யப்பட்டது என்ற கேள்வியும் இருப்பதாக தெரிவித்துள்ளது.

கடலுக்கு அடியில் உள்ள நமது உள்கட்டமைப்பை சுற்றி பல ஆண்டுகளாக சந்தேகத்திற்கிடமான ரஷ்ய நீர்மூழ்கிக் கப்பல் செயல்பாடு இருப்பதாகவும், எனவே பிரித்தானியா அதன் கடல் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் எச்சரித்தது.

இந்நிலையில் பால்டிக் கடல் பகுதியில் எரிவாயு குழாய்களின் மீதான ரஷ்யாவின் தாக்குதலை தொடர்ந்து, பிரித்தானிய பாதுகாப்பு செயலாளர் Ben wallace, நாட்டின் கண்காணிப்பு திறன்கள் கூடிய HMS சோமர்செட் போர் கப்பல்களை இந்த வாரம் வட கடல் பகுதிக்கு அனுப்பி வைத்தார்.

பிரித்தானிய கடல் படுகையில் ரஷ்ய கண்ணிவெடிகள்: தீவிர ஆய்வுக்கு அமைச்சர்கள் அறிவுறுத்தல் | Russian Mines Planted On Uk Britain S Sea Bed

அத்துடன் பிரித்தானிய கடல் படுகையில் முக்கிய பைப் லைன்கள் மற்றும் இணைய கேபிள்களுக்கு அருகில் கண்ணி வெடிகள் வைக்கப்பட்டு உள்ளதா என்று சோதனை செய்ய அமைச்சர்கள் முயற்சிக்க தொடங்கியுள்ளனர்.

மேலும் கன்சர்வேட்டிவ் கட்சி மாநாட்டில் பேசிய  பிரித்தானிய பாதுகாப்பு செயலாளர் Ben wallace நார்ட் ஸ்ட்ரீம் குழாய்களுக்கு ஏற்பட்ட மர்மமான சேதம், கலப்பின தாக்குதல்களை எதிர்கொள்ளும் போது பிரித்தானியாவின் உள்கட்டமைப்பு மற்றும் பொருளாதாரம் எவ்வளவு பலவீனமாக இருந்தது என்பதை நினைவூட்டுகிறது என தெரிவித்தார்.

கூடுதல் செய்திகளுக்கு: மன்னர் மூன்றாம் சார்லஸின் முடிசூட்டு விழா திகதி வெளியீடு: பிரித்தானிய வங்கிகளுக்கு முக்கிய அறிவிப்பு

ரஷ்யாவின் கடற்பரப்புப் போருக்கு எதிரான பிரித்தானியாவின் தடுப்புப் பிரச்சாரத்திற்கு உதவும் பல-திறன் கடல் கண்காணிப்புக் கப்பல்களை வாங்கும் திட்டத்தையும் பாதுகாப்புச் செயலர் உறுதிப்படுத்தினார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.