நயன்தாரா விக்னேஷ்சிவன் தம்பதிக்கு இரட்டை ஆண் குழந்தை! வைரலாகும் புகைப்படங்கள்.. குவியும் வாழ்த்து


இரட்டை குழந்தைகளுக்கு பெற்றோரான நயன்தாரா, விக்னேஷ் சிவனுக்கு குவியும் வாழ்த்துக்கள்

உங்கள் மீது என்றென்றும் கடவுள் அருள் புரிய வாழ்த்துகிறேன் என நடிகை திவ்யதர்ஷினி ட்வீட் செய்துள்ளார் 

நடிகை நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதிக்கு இரட்டை ஆண் குழந்தை பிறந்துள்ளது.

பிரபல நடிகை நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். கடந்த சூன் மாதம் சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் இவர்களது திருமணம் பிரம்மாண்டமாக நடந்தது.

இந்த நிலையில் விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில், தங்களுக்கு இரட்டை குழந்தை பிறந்துள்ளதாக புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

மேலும் அவரது பதிவில்,

‘நயன்தாராவும் நானும் அம்மா, அப்பாவாகிவிட்டோம்.

எங்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளது. எங்கள் முன்னோர்களின் ஆசீர்வாதங்கள், எங்கள் பிரார்த்தனைகள் மற்றும் நல்ல செயல்கள் எல்லாம் சேர்ந்து ஆசிர்வதிக்கப்பட்ட குழந்தைகளின் வடிவில் வந்து சேர்ந்துள்ளது. உங்கள் அனைவரின் ஆசிர்வாதமும் எங்கள் உயிர்களுக்கும், உலகத்திற்கும் வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.

நயன்தாரா விக்னேஷ்சிவன் தம்பதிக்கு இரட்டை ஆண் குழந்தை! வைரலாகும் புகைப்படங்கள்.. குவியும் வாழ்த்து | Nayanthara Vignesh Sivan Blessed Twin Babies

நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதிக்கு திரைத்துறையினரும், ரசிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.  



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.