தேவையில்லாமல் சீண்டிய பாஜக.. ஸ்மார்ட் பதிலடி கொடுத்த எம்.பி செந்தில்குமார்!

தருமபுரி நாடாளுமன்ற தொகுதியின் உறுப்பினராக திமுகவை சேர்ந்த செந்தில்குமார் அவர்கள் பதவி வகித்து வருகிறார். முதல் நாள் நாடாளுமன்ற பேச்சு தொடங்கி தற்போது வரை மிகவும் துடிப்புடன் செயல்படும் இவருக்கு தனியாக ரசிகர் பட்டாளமே உள்ளது. அந்த அளவுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நபராக வலம் வருகிறார்.

மருத்துவராக உள்ள செந்தில்குமார் அவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர், கட்சி நிர்வாகி என்பதை கடந்து சமூக வலைத்தளங்களில் உதவி கேட்டு நாடுபவர்களுக்கும், சிலரை தேடிச் சென்றும் உதவி செய்துள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாநிலம் கடந்து வடமாநில சிறுமி ஒருவரின் மருத்துவ சிகிச்சைக்கு செந்தில்குமார் உதவி செய்தது பலரது கவனத்தை ஈர்த்தது.

அதேநேரத்தில் அரசு நிகழ்ச்சிகளில் இந்து மத வழிபாடு, பூஜை விஷயங்களை தவிர்க்க வேண்டும். இல்லையேல் இந்து மதத்தை போல் இஸ்லாம், கிறிஸ்துவம் உள்ளிட்ட நபர்களையும் அழைத்து பூஜை செய்ய வேண்டும் என அவர் கருத்து தெரிவித்து வருகிறார். இந்த கருத்துக்கு எதிர்ப்பு மற்றும் ஆதரவு குரல்கள் வந்த வண்ணம் உள்ளன.

நாடாளுமன்ற உறுப்பினர்களில் பாஜகவினரால் அதிகம் குறிவைக்கப்படும் நபர்களில் தருமபுரி எம்.பியும் ஒருவர். இந்நிலையில், டிவிட்டரில் நபர் ஒருவர் கிரிக்கெட் விளையாடுவது போன்றும் அவர் தவறி ஸ்டெம்ப் மீது விழுவது போன்றும் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ள பாஜகவை சேர்ந்த காயத்ரி ரகுராம் எம்.பி செந்தில்குமாரை மறைமுகமாக சாடியுள்ளார். “என்ன சார் பூமி பூஜை செய்கிறீர்கள்? பூமியைத் தொட்டுப் வழிபாடு செய்வதில் உங்களுக்கு நம்பிக்கை இல்லை.. அது இந்து தர்மம் அசே.. சாஷ்டாங்கமாக கீழே விழுகிறாய்” என பதிவிட்டுள்ளார்.

அதேபோல் பலரும் செந்தில்குமாரின் டிவிட்டர் கணக்கை டேக் செய்து அவரை உருவ கேலி செய்து வருகின்றனர். அவர்களுக்கு பதில் அளிக்கும் விதமாக தனது டிவிட்டர் பக்கத்தில் மிகவும் டீசண்டாக செந்தில்குமார் அவர்கள் பதிலடி கொடுத்துள்ளார்.

“Bat பிடிப்பது இருக்கட்டும்.. நான் cricket ground பக்கம் கூட சென்றது இல்லை.. அது போகட்டும் யாரோ ஒருவர் கீழே விழுவது நான் இல்லை என்று தெரிந்தும், ஏன் பாவம் அவரை வைத்து கிண்டல்.. ஒரு கேமரா எடுத்து வாருங்கள் உங்கள் விருப்பத்திற்கு ஏற்றாற்போல் விழுகிறேன் பார்த்து மகிழ்ச்சி அடையுங்கள்” என்று மிகவும் நாகரிகமாக பதிவிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.