ஒன்று முதல் 12ஆம் வகுப்பு வரை… பள்ளிகளுக்கு இன்று விடுமுறை… வெளியான ஹேப்பி நியூஸ்!

உத்தரப் பிரதேச மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில்
கனமழை
வெளுத்து வாங்கி வருகிறது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. நேற்று ஒரேநாளில் பெய்த மழையில் 5 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மழை மேலும் தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால் மாணவர்களின் பாதுகாப்பை கருதி இன்று (அக்டோபர் 10) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் தொடர்ந்து இரண்டாவது நாளாக மழை விடுமுறை விடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. கவுதம் புத்தா நகர் மாவட்ட பள்ளி ஆய்வாளர் தரம்வீர் சிங் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அதிகப்படியான மழை காரணமாவும், மழை தொடர வாய்ப்புள்ளதாலும் இன்றைய தினம் அரசு, அரசு நிதியுதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுகிறது.

இந்த அறிவிப்பு ஒன்று முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து வகுப்புகளுக்கும் பொருந்தும். இதனை அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும் முறையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. காஸியாபாத் மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட தகவலின்படி, சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ, மாதர்சா கல்வி வாரியம், சமஸ்கிருத பள்ளிகள் அனைத்தும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலின்படி, கவுதம் புத்தா நகர் மாவட்டத்தில் பெய்த தொடர் மழையால் வெப்பநிலை 10 டிகிரி வரை குறைந்துள்ளது. இந்த மாவட்டத்தில் 25 மில்லிமீட்டர் அளவிற்கு மழை பெய்துள்ளதாக தெரியவந்துள்ளது. அதுமட்டுமின்றி ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டுள்ளது. இதன்மூலம் மேற்கு உத்தரப் பிரதேசத்தில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

எனவே சம்பந்தப்பட்ட மாவட்ட அதிகாரிகள் தயார் நிலையில் இருக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. இதேபோல் லக்னோ, நொய்டா, காஸியாபாத், கான்பூர், ஆக்ரா ஆகிய நகரங்களில் உள்ள ஒன்று முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கனமழை காரணமாக இன்று (அக்டோபர் 10) விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.

தலைநகர் டெல்லியில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை வெளுத்து வாங்கியது. குறிப்பாக SFD பகுதியில் 74.3 மில்லிமீட்டர், லோதி ரோட்டில் 87.2 மில்லிமீட்டர், அயாய் நகரில் 85.2 மில்லிமீட்டர், டெல்லி ரிட்ஜில் 60 மில்லிமீட்டர், பாலம் பகுதியில் 64 மில்லிமீட்டர் அளவிற்கு மழை பெய்துள்ளது. இன்று முதல் மழையின் தாக்கம் படிப்படியாக குறைய வாய்ப்புள்ளது. சாரல் மழை மட்டுமே பெய்யக்கூடும் என்று கூறப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.