வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
காபூல்: ஒவ்வொரு ஆப்கானிஸ்தானியரும் பாகிஸ்தானை வெறுக்கிறோம், ஆயிரக்கணக்கான தற்கொலைப்படை மூலமாக பாகிஸ்தானில் தாக்குதல் நடத்தி, இஸ்லாமாபாத்தை எங்களது இரண்டாவது தலைவராக மாற்றுவோம் என பாகிஸ்தானுக்கு தலிபான்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானிலிருந்து, கடந்த ஆண்டு ஆகஸ்டில் அமெரிக்க படைகள் வெளியேறின. அதன் பின் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். தலிபான்கள் ஆட்சி அமைந்தபிறகு கடந்த ஓராண்டாக பல்வேறு வன்முறைச் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.
இந்த நிலையில் பாகிஸ்தானுக்கும், ஆப்கானிஸ்தானுக்கு இடையே எல்லை பிரச்னைகள், பயங்கரவாதம் தொடர்பாக பதற்றமான சூழல் நிலவி வருகிறது. பாகிஸ்தான் தொடர்ந்து பதற்றத்தை அதிகரித்தால் தற்கொலைப்படை தாக்குதல் நடத்துவதாக தலிபான்கள் எச்சரித்துள்ளனர்.

இது தொடர்பாக தலிபான்கள் அதிகாரி அப்துல் பாசிர் ஷெர்சாடி, வெளியிட்ட வீடியோவில் பேசியதாவது:
ஒவ்வொரு ஆப்கானிஸ்தானியரும் பாகிஸ்தானை வெறுக்கின்றனர். ஆப்கானிஸ்தானுக்கு 5,000 ஆண்டுகால வரலாறு இருக்கிறது; அதை எவ்வாறு பாதுகாப்பது என்று அவர்களுக்கு தெரியும். பாகிஸ்தான் மீது தற்கொலைப்படை தாக்குதல் நடத்த ஆயிரக்கணக்கானோர் இருக்கின்றனர். பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தை எங்களது இரண்டாவது தலைநகராக மாற்றுவோம். இவ்வாறு அவர் எச்சரித்துள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement