மாணவர்களுக்கு பல்வேறு போட்டி தேர்வுகளுக்கான ஆன்-லைன் கோச்சிங் வகுப்பு மற்றும் பிற கல்விகளை வழங்கி வரும் டுரிட்டோ இந்தியா ஆன்லைன் தளம் இப்போது ‛டுரிட்டோ சாம்பியன்ஸ் புரொகிராம்’ என்ற பெயரில் புதிய தளத்தை துவக்கி உள்ளது.
இந்த திட்டம் 4 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆன்லைன் நேரலை வகுப்புகளை வழங்கும். இதன்மூலம் அவர்கள் பல்வேறு போட்டித் தேர்வுகள், பள்ளி தேர்வுகளுக்கு தயாராகி வருபவர்கள் தங்களது திறன்களை மேம்படுத்தி கொள்ள உதவுகிறது. சிறந்த ஆசிரியர்களின் வழிகாட்டுதலுடன், இந்தத் திட்டம் ஒரு நாளைக்கு மூன்று ரூபாய் என மிக குறைந்த விலையில் வழங்கப்படுகிறது.
டுரிட்டோ சாம்பியன்ஸ் என்பது ஆல் இன் ஒன் பேக்கேஜ் திட்டமாகும். இது மாணவர்களின் கல்வி மற்றும் இணை பாடத் திறன்களை நன்கு வளர்க்க உதவுகிறது. நாள் ஒன்றுக்கு 2 மணிநேரம் நேரலையில் வகுப்புகள் நடத்தப்படும். இதன்மூலம் மாணவர்கள் JEE/ NEET போன்ற போட்டித் தேர்வுகளுக்குத் தங்களை தயார்படுத்திக் கொள்ள வழிவகை செய்கிறது.
திறன்வாய்ந்த 2 ஆசிரியர்கள் உதவியோடு இந்த கல்வி வழங்கப்படுகிறது. அதே நேரத்தில் மாணவர்களின் கேள்விகள், வினாடி வினாக்கள் மற்றும் அரட்டை மற்றும் பிற ஆன்லைன் கருவிகள் பற்றிய சந்தேகங்களை கையாள வழிவகை செய்யப்பட்டுள்ளது. AI அடிப்படையிலான பரிந்துரையுடன் இந்த ஆன்லைன் கல்வி வழங்கப்படுகிறது. போதிய பயிற்சி, மாதிரி டெஸ்ட் போன்றவையும் நடத்தப்பட உள்ளது. மேலும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் வருகை, சோதனை மதிப்பெண்கள் மற்றும் ஒட்டுமொத்த செயல்திறனைக் கண்காணிக்க ‘Turito Parental app’ என்ற தனி செயலியையும் வழங்கியுள்ளனர்.
இதுபற்றி டுரிட்டோவின் நிறுவனர் உதய் ரெட்டி கூறுகையில், ‛‛கல்வியை ஜனநாயகப்படுத்துவது” தான் இந்த திட்டத்தின் நோக்கமாகும். எளிமையான பின்னணியில் இருந்து வந்த எனக்கு, கிராமப்புற இந்தியாவில் உயர்தரக் கல்வியின் சவால்கள் பற்றிய புரிதல் உள்ளது. இதைக் கருத்தில் கொண்டு, டுரிட்டோ, இந்தியா முழுவதும் உள்ள ஒவ்வொரு மாணவரையும் சென்றடையும் வகையில் குறைந்த விலையில் உயர்தர உள்ளடக்கத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. கிராமப்புற மக்களுக்கும் பயனளிக்கும் விதமாக அனைத்து குழந்தைகளுக்கும் சமமான தளத்தை டுரிட்டோ வழங்கும் என நாங்கள் நம்புகிறோம்.
மேலும் 5ஜி தொலைத்தொடர்பு புரட்சியால் குழந்தைகள் இன்னும் அதிகம் கற்றுக் கொள்ளவும் அதன் திறனை மேம்படுத்தவும் வழிவகுக்கும். இதை முன்னெடுத்து இந்திய மாணவர்களுக்கு குறைந்த விலையில் இதுபோன்ற திட்டங்களை டுரிட்டோ முன்னெடுக்கும்” என்றார்.
மேலும் விபரங்களுக்கு : www.turito.com/in/course/broadcast-classes என்ற லிங்க்கை கிளிக் செய்யவும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement