ரஷ்ய ஏவுகணைத் தாக்குதல்களைத் தொடர்ந்து ஜேர்மனி உக்ரைனுக்கு உடனடியாக செய்ய இருக்கும் உதவி…


கிரீமியா பாலம் தகர்க்கப்பட்டதைத் தொடர்ந்து, ரஷ்யா உக்ரைன் மீது கடுமையான ஏவுகணைத் தாக்குதல்களைத் தொடுத்தது.

இந்த சூழலில் ஜேர்மனி உக்ரைனுக்கு முக்கிய உதவி ஒன்றைச் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.
 

ரஷ்யா கிரீமியாவுக்கிடையிலான பாலம் தகர்க்கப்பட்டதைத் தொடர்ந்து, ரஷ்யா உக்ரைன் மீது கடுமையான ஏவுகணைத் தாக்குதல்களைத் தொடுத்து வருகிறது. 

இந்நிலையில், வான்வெளித்தாக்குதல்களிலிருந்து பாதுகாக்கும் அமைப்பு ஒன்றை உடனடியாக உக்ரைனுக்கு வழங்க இருப்பதாக ஜேர்மனி அறிவித்துள்ளது.

இந்த அமைப்பு ஒரு நகரத்தையே வான்வெளித்தாக்குதலிலிருந்து காப்பாற்றக்கூடியதாகும்.

ரஷ்யா தாக்குதல்களை இழிவானது என விமர்சித்துள்ள ஜேர்மன் வெளியுறவு அமைச்சரான Annalena Baerbock, உக்ரைனின் வான்பாதுகாப்பை வலுப்படுத்த அனைத்தையும் செய்துவருகிறோம் என்று ட்விட்டரில் வெளியிட்ட செய்தி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

ரஷ்ய ஏவுகணைத் தாக்குதல்களைத் தொடர்ந்து ஜேர்மனி உக்ரைனுக்கு உடனடியாக செய்ய இருக்கும் உதவி... | Immediate Help For Ukraine

image – AP

ஒரு நகரத்தையே வான்வெளித்தாக்குதல்களிலிருந்து பாதுகாக்கக்கூடிய அதிநவீன Iris-T systems என்னும் அமைப்புகளை உக்ரைனுக்கு அளிக்க இருப்பதாக ஜூன் மாதத்திலேயே ஜேர்மன் சேன்சலரான ஓலா ஷோல்ஸ் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் பிற நகரங்கள் மீது ரஷ்யா ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது வான்பாதுகாப்பு அமைப்புகளை உடனடியாக உக்ரைனுக்கு அளிக்கவேண்டும் என்பதை அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளது என்று கூறியுள்ளார் ஜேர்மன் பாதுகாப்புத்துறை அமைச்சரான Christine Lambrecht.

ஜேர்மனி உக்ரைனுக்கு வழங்க இருக்கும் Iris-T system என்னும் பாதுகாப்பு அமைப்பு, 20 கிலோமீற்றர் உயரமும் 40 மீற்றர் அகலமும் கொண்ட, தோராயமாக கூறினால், ஒரு நகரத்தையே ஏவுகணைத் தாக்குதலிலிருந்து பாதுகாக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.