பரந்தூரில் அமைய உள்ள விமான நிலையம் திட்டத்தை கைவிடக் கோரி நடை பயணம்!
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்றுவட்டார பகுதியில் 13 கிராமங்களை உள்ளடக்கிய நிலப் பகுதியில் பசுமை வழி விமான நிலையம் அமைய உள்ளது. இதனை மத்திய மாநில அரசுகள் அறிவித்து நில கையகப்படுத்துவதற்கான பணிகளை முதற்கட்டமாக துவங்கி உள்ளன. பரந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 4750 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இவ்விடத்தில் சென்னையில் இரண்டாவது விமான நிலையம் அமைப்பதற்கான பணிகள் துவங்கப்பட உள்ளது. 13 கிராமங்களிலும் விவசாய நிலங்கள் அதிகமாக உள்ளதால் அப்பகுதி மக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதற்காக பல்வேறு கட்ட போராட்டங்களையும் நடத்தை வருகின்றனர்

கடந்த அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி அன்று நடைபெற்ற கிராம சபை கூட்டங்களில் தீர்மானங்கள் இயற்றப்பட்டன. பரந்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள 13 கிராமங்கள் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்நிலையில் 13 கிராம மக்களும் தங்களின் எதிர்ப்பை பதிவு செய்யும் வகையில் வரும் 17ம் தேதி கூட உள்ள தமிழக சட்டசபையை நோக்கி நடைபயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்பொழுது 13 கிராம மக்களும் ஒன்று சேர்ந்து இதுக்கான திட்டப்பணிகளை துவங்கி உள்ளதாக தெரிய வருகிறது.