டுவிட்டரில் இருந்து வெளியேறினார் கரண் ஜோஹர்

பிரபல பாலிவுட் இயக்குனரும் தயாரிப்பாளருமான கரண் ஜோஹர் பாலிவுட் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நபராக வலம் வருகிறார். பாலிவுட்டில் பெரிய படங்கள் வெளியானாலும் தென்னிந்திய மொழியில் உருவாகி பாலிவுட்டில் ரிலீசாகும் படங்களானாலும் அதை அங்கு வெளியிடுபவராகவோ அல்லது தனது காபி வித் கரண் என்கிற நிகழ்ச்சி மூலமாக புரமோசன் பண்ணுபவராகவோ என ஏதோ ஒரு வகையில் அவரும் அந்த படங்களுடன் இணைந்து இருப்பார்.

அதே சமயம் தனது காபி வித் கரண் என்கிற நிகழ்ச்சி மூலம் தனக்கு வேண்டிய நட்சத்திரங்களை குறிப்பாக ஆலியா பட், ரன்பீர் கபூர் போன்றவர்களை உயர்த்தி பிடித்து நெபோடிசத்துகு ஆதரவாகவும் தனக்கு விருப்பம் இல்லாத நபர்களை மட்டும் தட்டுவதற்கும் அந்த ஷோவை பயன்படுத்துகிறார் என்கிற குற்றச்சாட்டு நீண்ட நாட்களாகவே அவர் மீது இருந்து வருகிறது. இதன் எதிரொலியாக அவரது டுவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிடும் ஒவ்வொரு பதிவிற்கும் எதிர்மறை கருத்துக்கள் நிறைய வந்தவண்ணம் இருந்தன.

இன்னும் ஒருபடி மேலாக அவர் தயாரிக்கும் படங்களுக்கோ வெளியிடும் படங்களுக்கோ ஆதரவு கொடுக்க வேண்டாம் என கூறி பாய்காட் செய்யும் புதிய டிரெண்ட்டும் சமீபகாலமாக பாலிவுட்டில் இடம் பிடித்துள்ளது. இந்த நிலையில்தான் டுவிட்டரை விட்டு தான் வெளியேறுவதாக அறிவித்து குட்பை சொல்லி உள்ளார் கரண் ஜோஹர். இதுகுறித்து அவர் கூறும்போது பாசிட்டிவ் எனர்ஜிக்கான இடம் நிறைய தேவைப்படுவதால் டுவிட்டரை விட்டு வெளியேறுவதாக குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.