புதுடில்லி: பி.சி.சி.ஐ., புதிய தலைவராக ரோஜர் பின்னி தேர்வு செய்யப்படுகிறார். இந்திய கிரிக்கெட் போர்டு தலைவராக கடந்த 2019-ம் முதல்இந்திய அணி முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி, செயலராக ஜெய்ஷா உள்ளனர். இம்மாதத்துடன் இவர்களின் பதவிகாலம் முடிகிறது.
புதியநிர்வாகிகள் தேர்தல் நடக்க இருந்தது. ஆனால் அனைத்து நிர்வாகிகளும் தேர்தல் இல்லாமல் ஒரு மனதாக தேர்வு செய்யப்படுகின்றனர்.கங்குலி அடுத்த 3 ஆண்டு தலைவர் பதவியை தொடர விரும்பவில்லை என்றார். இதனால் முன்னாள் ஆல் ரவுண்டரான ரோஜர்பின்னி புதிய தலைவராக தேர்வு பெற்றார்.
செயலராக ஜெய் ஷா தொடர்கிறார். பொருளாளராக ஆஷிஷ் ஷே லர், புதிய இணைச் செயலர்களாக ஹிமந்தா பிஸ்வாவுக்கு நெருக்கமான தேவஜித் சய்கியா தேர்வாகிறார்.
கங்குலி மறுப்பு
இந்நிலையில் ஐ.பி.எல். எனப்படும் பிரீமியர் லீக் கிரிக்கெட் அமைப்பின் தலைவராக கங்குலி பொறுப்பேற்க உள்ளதாகவும், பா.ஜ.,வில் இணையப்போவதாகவும் செய்திகள் வெளியாயின. இதனை கங்குலி திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement