ஆயுஷ் மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும்.
நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் ஆயுஷ் மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கு கடந்த செப்டம்பர் 21ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் எனவும், இதற்கான விண்ணப்பம் http://tnhealth.tn.gov.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இதற்கான விண்ணப்பம் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை இயக்குனர் அலுவலகத்திற்கு இன்று (அக்டோபர் 12-ம் தேதி) மாலை 5.30 மணிக்குள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.