போக்குவரத்து விதிகளை பின்பற்றுவது கட்டாயம். விதிகளை மீறுபவர்கள் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கைகள் எடுத்துவருகிறது. நாடு முழுவதும் ஆயிரக்கணக்கில் அபராத வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் 27 அன்று காரில் சென்ற பியூஷ் வர்ஷ்னி என்பவருக்கு ஹெல்மெட் அணியவில்லை என காவல்துறை அபராதம் விதித்திருந்தது. மேலும், அவருக்கு வழங்கப்பட்ட ரசீதில் காரின் எண்ணுடன் ஹெல்மெட் அணியவில்லை எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. அதைத் தொடந்து, காவல்துறையின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக பியூஷ் வர்ஷ்னி காரில் சென்றாலும் தொடர்ந்து ஹெல்மெட் அணிந்து செல்கிறார்.

காவல்துறையின் இது போன்ற சம்பவங்கள் ஒருபுறம் இருந்தாலும், மற்றொரு புறம் பாமர மக்கள் மனதில் அச்சமும் ஏற்பட்டிருக்கிறது. ஷாகாஸிம் என்ற ட்விட்டர் பயனர் சமீபத்தில் ஒரு வீடியோவை பதிவேற்றியிருக்கிறார். அந்த வீடியோவில் 4 சக்கரங்கள் கொண்ட தள்ளுவண்டியில் காய்கரி விற்கும் நபர் ஹெல்மெட் அணிந்து வருகிறார்.
அவரிடம் ஏன் ஹெல்மெட் அணிந்திருக்கிறீர்? எனக் கேட்கப்பட்டபோது, “அடுத்த சந்திப்பில் போலீஸ் நிற்கிறார். அவர் அபராதம் விதித்தால் என்ன செய்வது. அதற்காகதான் ஹெல்மெட் அணிந்திருக்கிறேன்’’ என விளக்கமளிக்கிறார். வீடியோ எடுக்கும் நபர்,” ஹெல்மெட் அணிய வேண்டிய கட்டாயம் உங்களுக்கு கிடையாது. அது இருசக்கர வாகனத்தில் செல்பவர்களுக்கு தான்” எனத் தெரிவித்த போது அப்பாடியா என அவர் ஹெல்மெட்டை நீக்குகிறார்.
Bhai apka knowledge to Kamal hai bhai pic.twitter.com/twjvQhNe6a
— ShaCasm (@MehdiShadan) October 9, 2022
இந்த வீடியோக்கு, “அபராதம் காரணமாக காவல்துறைக்கு பயப்படும் அப்பாவி மக்களின் சோகமான நிலை. விழிப்புணர்வை சரியான முறையில் மக்களுக்கு சென்று சேரக்கவில்லை” எனக் கருத்து தெரிவித்திருக்கிறார்கள் நெட்டிசன்கள். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.