செக் போஸ்ட்!| Dinamalar

‘இன்பார்மர்’ வேலையில் தலைவரு!

இக்கடா, துக்கடா கட்சியோட ஒருத்தரு, ஏமி, எக்கடா, முக்குடா, என்றெல்லாம் கிராமத்து மண்வாசனையை கேலி, கிண்டல் செய்ததை மறக்க முடியுமா? இவரு, ‘அக்கடா’ சென்று ஓட்டு வாங்கினால் தான் ‘ராஜா’ன்னு அசெம்பிளிக்கு போக முடியும்னு, கோல்டு சிட்டி தலையெழுத்து மாறிடுச்சே.

புத்திசாலிகள் உள்ள நகரத்தில் வேட்பாளர்கள் புதுசா வருவதே கஷ்டமாயிடுச்சு. வயசான பெருசு, இதுவே தனக்கு கடைசி எலக் ஷன்னு சொல்லி அழ தொடங்கினாலும், நாக்குல சனி, விட்டு தொலையலையாம்.

ஓட்டு தரும் ஜனங்கள பகைச்சிக்கிட்டா சா.பேட்டை, சொ.பேட்டை, ரா.பேட்டை, உ.பேட்டை பகுதிகளில் கூட முழுசா ஓட்டுகளை வாங்கிடவா முடியும். மா.குப்பம், சொ.குப்பம், மஸ்கம், எங்கே தான் 100 சதம் ஓட்டு அள்ள முடியுமோ. நகரிலும் பகைச்சிக்கிட்டா,ஓட்டுக்கான நல்ல உறவை வெறுத்துக் கிட்டா எப்பூடி?

கோல்டு சிட்டி செக்யூரிட்டி ஆபீசருக்கு இன்பார்மர் வேலையை ‘அன்பிட்’ தலைவரு செய்து வர்றாராம். அந்த ஆபீசரு மட்டுமே1 லட்சம் ஓட்டு கொண்டு வந்துடுவாரா. ஆறு மாதத்தில் ஜனங்க குட் ரிசல்ட் தரப்போறாங்க.

சொல்ல மறக்கலாமா?

கோல்டு சிட்டியின் ஏரியை புனரமைக்க சென்ட்ரல் நிதி அமைச்சர் வந்தாங்க. இல்லாத ஊரில் இலுப்ப பூ சர்க்கரையா நெனச்சு துார்வார வச்சாங்க. அமைச்சர் மேடத்துக்கு மைன்ஸ் தண்ணீர் நிரம்பி உள்ளதை, என்ன செய்ய வேண்டும் என யாருமே சொல்லலையே.

‘வேஸ்டாக’ இருக்கிற தண்ணீரை அணை ஏற்படுத்தி, தேக்கி சுத்திகரித்தாலே மாவட்டம் முழுதுக்கும் பஞ்சமே இல்லாமல் நிரந்தரமாக சப்ளை தர முடியும்னு ‘மாஜி’ தொழிலாளிகள் சொல்றாங்களே.

இதுக்கு மாரி குப்பம் மைசூரு மைன்ஸ் தண்ணீரே உதாரணம்னுசொல்லி இருக்கலாமே. கோல்டு தான் வேணாம்னு மூடியாச்சு. தண்ணீரையாவது தாராளமாக தரலாமே.

அதிர்ச்சியை ஏற்படுத்துமா ஆய்வு?

பொறுப்பு அமைச்சர் பர்சன்டேஜ் கேட்டதாககான்ட்ராக்ட்காரங்ககொளுத்தி போட்டாங்க. விடுவாரா மு.ரத்தினம். இவரென்ன 40 சதவீதம் கேட்டு பதவியை பறிகொடுத்தவரா அல்லது மறப்போம்… மன்னிப்போம்னு சொல்வதற்கு. சினிமா ஸ்டைலில் தடயமே இல்லாம வேலையை முடிக்கிற ‘தில்’ லான மந்திரியாச்சே, சும்மா விடுவாரா.

கோலார் மாவட்டத்தில் ஐந்து நாட்கள் தங்கிட்டாரு. ஒப்பந்த வேலைகளை ஆய்வு செய்ய துவங்கிட்டாரு. ஒப்பந்தக்காரர்கள் ‘பில்’ வாங்க முடியுமா.மாவட்டம் முழுதும் 1,000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வேலை ஒதுக்கியதை விடுவாரா. ஆய்வு செய்ய தொடங்கிட்டாரு. சிக்கலில் சிக்கிக்கிட்டவங்கள யார் காப்பாற்ற போறாங்களோ?

மாவட்டத்தில் நிறைய இடைத்தரகர்கள் உருவாகி இருக்காங்க. இவங்க ‘கமிஷன்’ வித்தைகளை காட்டுறாங்களாம்.

கை கட்சியுடன் சுமுக உறவு!

தயாராக இருக்கும் அரசு அலுவலக கட்டடங்கள் ஒவ்வொன்றாக திறக்க, காலம் கனிந்திருக்கு. இதில் தாலுகா பஞ்சாயத்து அலுவலகம் திறக்க நாள் நிர்ணயிச்சிட்டாங்க.சலசலப்பே இல்லாமல் இதுக்கு அடுத்து தான்மருத்துவமனை,மினி விதான் சவுதா கட்டடங்கள் திறப்பு விழா நடத்த போறாங்களாம்.

மந்திரிங்க எல்லாமே ஒத்துழைக்க போறாங்களாம். எல்லாமே அசெம்பிளி மேடத்துக்கு அவரோட ‘நைனா’ ஆசிர்வாதம் தானாம். பூக்கட்சியினர் கோல்டு சிட்டி மேடமை விமர்சிப்பது அடங்கி இருக்கு. அதென்ன ரகசியமோ. பூ கட்சியின் ஓரிரு கோஷ்டிகள் கை கட்சி மேடத்துக்கு உறுதுணையாக இருக்க போறாங்களாம்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.