மாரடைப்பால் இறந்து 90 நிமிடங்களுக்குப் பின் உயிர்பெற்ற நபர்: என்ன பார்த்தாராம் தெரியுமா?


மரணமடைந்த பின் மீண்டும் உயிர்பெற்ற சிலர், தாங்கள் கண் கூசச்செய்யும் ஒளியைக் கண்டதாகவும், சிலர் தாங்கள் மிதப்பதுபோல் உணர்ந்ததாகவும் பல அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டதுண்டு.

ஆனால், சமீபத்தில் மாரடைப்பால் இறந்து, தன் மனைவி மற்றும் மருத்துவர்களின் உதவியால் 90 நிமிடங்களுக்குப் பின் உயிர்பெற்ற ஒருவர் வித்தியாசமான ஒரு விடயத்தைக் கூறியுள்ளார்.

சமீபத்தில் அவுஸ்திரேலியா நாட்டவரான Alistair Blake (61) என்பவர், மாரடைப்பால் உயிரிழந்தார். மருத்துவர்கள் அவரை காப்பாற்ற எடுத்த கடுமையான முயற்சியைத் தொடர்ந்து, உயிரிழந்து 90 நிமிடங்களுக்குப் பின் அவர் மீண்டும் உயிர்பெற்றார்.

அவரிடம், நீங்கள் உயிரிழந்தபோது என்ன பார்த்தீர்கள் என பலரும் கேட்கிறார்களாம்.

மாரடைப்பால் இறந்து 90 நிமிடங்களுக்குப் பின் உயிர்பெற்ற நபர்: என்ன பார்த்தாராம் தெரியுமா? | Person Who Survives After 90 Minutes

Credit: facebook

அதற்கு அவர், நான் எதையும் பார்க்கவில்லை, பிரகாசமான ஒளியையும் பார்க்கவில்லை, எதையுமே பார்க்கவில்லை என்கிறார்.

என்ன நடந்தது என்றே எனக்குத் தெரியவில்லை என்று கூறும் Alistair, ஆனால், எனக்கு அதைக்குறித்து கவலையில்லை என்கிறார்.

காரணம், நான் இப்போது ஆரோக்கியமாகவும் கட்டுக்கோப்பாகவும் இருக்கிறேன், அது போதும் என்கிறார் Alistair.
 

மாரடைப்பால் இறந்து 90 நிமிடங்களுக்குப் பின் உயிர்பெற்ற நபர்: என்ன பார்த்தாராம் தெரியுமா? | Person Who Survives After 90 Minutes

Credit: facebook



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.