புற்றுநோயின் அபாயத்தைக் குறைப்பதில் நமது உணவுமுறை, முக்கிய பங்காற்றுகிறது. எந்த நேரத்தில் உணவு எடுத்துக்கொள்கிறோம் என்பது புற்றுநோய் உருவாகும் அபாயத்தை தீர்மானிக்கிறது என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இரவு 9 மணிக்குப் பிறகு தொடர்ந்து சாப்பிடுபவர்கள் மற்றும் சாப்பிட்ட பிறகு இரண்டு மணி நேரம் கூட நேரம் எடுத்துக்கொள்ளாமல் உடனே படுக்கைக்கு செல்பவர்களுக்கு புற்றுநோய் வருவதற்கான அபாயம் 25% அதிகம் இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர்.
உடல் கடிகாரம் சரியாகச் செயல்பட்டு இரவு 9 மணி அல்லது அதற்குப் பிறகு, சரியாக உறக்கம் வர வேண்டும். அந்த நேரத்திற்கும் பிறகு உடல் சுறுசுறுப்பாக செயல்படுவது தூக்கம், பசி மற்றும் மன ஆரோக்கியத்தை பாதிக்கக்கூடும். இதற்கு காரணம் தவறான நேரத்தில் சாப்பிடக்கூடிய உணவுதான்.
இரவு உணவிற்குப் பிறகு இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நேரத்திற்கு பின் தூங்கச் செல்லும் ஆண்களுக்கு புரோஸ்டேட் புற்றுநோயும், பெண்களுக்கு மார்பக புற்றுநோயும் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் 20 சதவீதம் குறைவாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
தாமதமாக உணவு எடுத்துக்கொள்ளும் ஆண், பெண் இருவருக்குமே புற்றுநோய் பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு 25 சதவீதம் அதிகம் உள்ளது. உணவு உண்ணும் நேரத்தை தாண்டி சில சான்றுகள் தூக்கம் முறையாக இல்லாதது புற்றுநோய் என காரணமாக இருக்கலாம் என்று கூறுகின்றன.
newstm.in