தென்னிலங்கை மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்திய மாணவியின் மரணம்


மாத்தறையில் மாற்றுத்திறனாளியான மாணவி ஒருவர் உயிரிழந்தமை அந்தப் பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மாத்தறை, திக்வெல்ல, ரத்மலே பிரதேசத்தைச் சேர்ந்த தெவ்மி ரன்சரா என்ற மாணவி காய்ச்சல் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் உயிரிழந்துள்ளார்.

குறித்த மாணவிக்கு இரண்டு கால்களும் ஊனமுற்ற நிலையில் இரண்டு கைகளும் சரிவர செயற்படாத நிலையிலும் கல்வியில் திறமைப்பட சித்தி பெற்றுள்ளார்.

சாதாரண தரத்தில் சித்தி

தென்னிலங்கை மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்திய மாணவியின் மரணம் | The Death Of The Student

கடந்த 2020ம் ஆண்டு சாதாரண தரப் பரீட்சையில் தோற்ற ஒன்பது பாடங்களிலும் ஏ சித்தி பெற்று உயர்தர கல்வியை தொடர்ந்து வந்தார்.

கணிதப் பிரிவில் உயர்தரம் கற்கும் ஆசையைக் கொண்டிருந்த போதும் உடல்நிலையைக் கருத்திற் கொண்டு தகவல் தொழில்நுட்பத்தில் உயர்கல்வியைத் தொடர்ந்து கொண்டிருந்தார்

நடக்க முடியாத அவரை காலையில் பாடசாலைக்கும் மாலையில் வீட்டுக்கும் சுமந்து செல்வது அவரின் பெற்றோருக்கு சுகமான சுமையாகவே இருந்தது.

தீவிர காய்ச்சல்

தென்னிலங்கை மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்திய மாணவியின் மரணம் | The Death Of The Student

எழுதும் போது பேனையின் மூடியைக் கழற்றி இன்னொருவர் அவரது கையில் பேனையைக் கொடுக்க வேண்டும். கொப்பியில் ஒரு பக்கத்தை எழுதி முடித்தால் மறுபக்கத்தில் தொடர இன்னொருவர் தான் அந்தத் தாளைப் புரட்டிக் கொடுக்க வேண்டும்.

இவ்வாறான சிரமங்களுக்கு மத்தியிலும் உயர்தரக் கல்வியை மன உறுதியுடன் தொடர்ந்து கொண்டிருந்த நிலையில் உயிரிழந்தமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.