வெளிநாட்டில் பூத்த தன்பாலின காதல்! நீண்ட போராட்டத்திற்கு பின் இந்திய பெண்கள் திருமணம்


உறவினர்களின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துகொண்ட இந்திய பெண்கள்

திருமண பந்தத்தில் இணைந்த தன்பாலின ஈர்ப்பாளர் பெண்களுக்கு இணையத்தில் குவியும் வாழ்த்துக்கள்

இந்திய மாநிலம் கேரளாவில் தன்பாலின ஈர்ப்பாளர் பெண்கள் நீதிமன்ற அனுமதியுடன் திருமணம் செய்துள்ளனர்.

கேரள மாநிலம் எர்னாகுளத்தை அடுத்த ஆலுவா பகுதியைச் சேர்ந்தவர் ஆதிலா நஸ்ரின்.

இவர் சவூதி அரேபியாவில் 11ஆம் வகுப்பு படிக்கும்போது பாத்திமா நூரா என்ற பெண்ணை சந்தித்துள்ளார்.

முதலில் நட்பாக பழகிய இருவரும் பின்னர் காதலிக்க தொடங்கியுள்ளனர். அதனைத் தொடர்ந்து இவர்களின் உறவு குறித்து அறிந்த உறவினர்கள், நஸ்ரினுக்கு தெரியாமல் நூராவை கேரளாவுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

வெளிநாட்டில் பூத்த தன்பாலின காதல்! நீண்ட போராட்டத்திற்கு பின் இந்திய பெண்கள் திருமணம் | Kerala Lesbian Couple Married After Struggle

இதுகுறித்து அறிந்த நஸ்ரின் தனது தோழியைத் தேடி கேரளாவுக்கு வந்துள்ளார். இருவரும் இணைந்து வீட்டை விட்டு வெளியேறி தனியாக தங்கி இருந்தனர்.

உறவினர்கள் இவர்களது உறவை பிரிக்க முயற்சிக்கவே, இந்த விடயம் நீதிமன்றம் வரை சென்றது.

அப்போது வயது வந்த தங்களை விருப்பப்படி சேர்ந்து வாழ நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும் கோரியிருந்தார்.

இந்த நிலையில் கேரளா உயர்நீதிமன்றத்தில் ஆதிலா நஸ்ரின் – பாத்திமா நூரா இருவரும் சேர்ந்து வாழ அனுமதி அளிக்கப்பட்டதுடன், உறவினர்கள் அவர்களது வாழ்க்கைக்கு இடையூறு செய்யக்கூடாது எனவும் உத்தரவிடப்பட்டது.

வெளிநாட்டில் பூத்த தன்பாலின காதல்! நீண்ட போராட்டத்திற்கு பின் இந்திய பெண்கள் திருமணம் | Kerala Lesbian Couple Married After Struggle

அதன் பின்னர் ஆதிலா நஸ்ரினும், பாத்திமா நூரா இருவரும் தற்போது திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர்.

அவர்களது திருமணம் குறித்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர். இந்த தம்பதிக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.  

வெளிநாட்டில் பூத்த தன்பாலின காதல்! நீண்ட போராட்டத்திற்கு பின் இந்திய பெண்கள் திருமணம் | Kerala Lesbian Couple Married After Struggle



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.