அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள ரி 20 உலகக்கிண்ண தொடருக்கு முன்னதாக இன்று (13) நடைபெறவிருந்த இலங்கை மற்றும் அயர்லாந்து அணிகளுக்கிடையிலான பயிற்சிப் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டுள்ளது.
இதேவேளை நமீபியா மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையில் இன்று (13) நடைபெறவிருந்த பயிற்சிப் போட்டியும் மழை காரணமாக கைவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரி 20 உலகக் கிண்ணப் போட்டிகள் எதிர்வரும் 16 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன் இலங்கை மற்றும் நமீபியா அணிகளுக்கு இடையிலான முதலாவது போட்டி விக்டோரியாவில் உள்ள Geelong மைதானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.