இந்த சீரற்ற காலநிலை எதிர்வரும் 24 மணித்தியாலயங்கள் தொடரும் என்றும் நாளை 14 ஆம் திகதி நண்பகல் வரை நீடிக்கும் என்றும் அறிவித்துள்ளது.
மேற்கு, தெற்கு, மத்திய, சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
இந்த பிரதேசங்களில் சில இடங்களில் 100 மில்லிமீட்டருக்கு மேற்பட்ட மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படும். சில இடங்களில் 75 மில்லிமீட்டர் மழை பெய்யக்கூடும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.