திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ராஜா ராணி ரெசிடென்சியில், நகர ஓட்டல்கள் உரிமையாளர்கள் சங்க ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு ஓட்டல் சங்கத் தலைவர் ஜி .ரங்கநாதன் தலைமை தாங்கியநிலையில், இணைச் செயலாளர் சிவசண்முகம் அனைவரையும் வரவேற்றார்.
இக்கூட்டத்தில் நகரப் பொருளாளர் ராஜா ராணி பி தாமோதரன், துணைத்தலைவர் டி. புக் ராஜ்குமார், செயலாளர் அமானுல்லா, என். சங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் அவர்கள் தெரிவித்ததாவது, “ஓட்டல்களில் பிளாஸ்டிக் பைகளை உபயோகிக்க கூடாது என்றும், பார்சல் வாங்குபவர்களுக்கு பிளாஸ்டிக் பைகளை வழங்கக் கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளனர். மேலும், இக்கூட்டத்தில் வடமலை, பிரகாசம் ,அன்பழகன், உட்பட பலர் கலந்து கொண்டு பேசிய நிலையில், பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதாவது,
* திருப்பத்தூர் நகர பகுதிகளில் இயங்கும் ஓட்டல்கள் பேக்கரிகள் டீக்கடைகளில் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தக் கூடாது.
* பார்சல் வாங்குபவர்களுக்கு பிளாஸ்டிக் மாற்று பொருள்களை பயன்படுத்த வேண்டும்.
* பிளாஸ்டிக் பயன்படுத்துபவர்களை நகராட்சி மூலம் உடனடியாக அபராதம் விதிக்க வேண்டும், என்று பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, இந்நிகழ்ச்சியின் இறுதியாக டி.கே. ரவி நன்றி தெரிவித்தார்.