லண்டன்,:ஐரோப்பிய நாடான பிரிட்டனின் மன்னர் மூன்றாம் சார்லஸ், அடுத்தாண்டு மே 6ல் நடக்கும் நிகழ்ச்சியில் மன்னராக முடிசூட்டப்பட உள்ளார்.
பிரிட்டன் அரசக் குடும்பத்தில், ராணியர் அணியும் கிரீடம் புகழ்பெற்றது. மொத்தம், 2,800 வைரங்கள் மற்றும் உலகிலேயே மிகப் பெரிதாக கருதப்படும், 105 காரட் கோஹினுார் வைரம் பதிக்கப்பட்டது இந்த கிரீடம்.
இந்த கோஹினுார் வைரம் இந்தியாவில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. இதற்கு மத்திய அரசு தொடர்ந்து உரிமை கோரி வருகிறது.
இந்நிலையில், மூன்றாம் சார்லஸ் முடிசூட்டும் விழாவின்போது, கோஹினுார் வைரம் பதித்த கிரீடத்தை கமிலா அணிவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதற்கிடையே, இதற்கு பா.ஜ., எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், முடிசூட்டும் விழாவின்போது, கோஹினூர் வைரம் பதித்த கிரீடத்தை அணிவதை கமிலா தவிர்க்க உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement