தஞ்சாவூர் மவட்டத்தை சேர்ந்த செல்வம் ,விஜயா ஆகியோரின் இரண்டாவது மகள் அனிதா, (இன்னும் திருமணம் ஆகவில்லை).ரயில்வேயில் டிக்கட் பரிசோதகராக பணியாற்றி வந்தார்.இந்த நிலையில் ஈரோடு திண்டலில் உறவினரின் இறப்பு துக்க நிகழ்வுக்காக இரு தினங்களுக்கு முன் குடும்பத்துடன் வந்துள்ளனர். அருகில் உள்ள கடைக்கு செல்ல அனிதா தனது உறவினர் மகன் தனுஷ் மற்றும் 11 வயது சிறுவன் ரியாஸ் ஆகியோருடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
கடைக்கு சென்றுவிட்டு பெருந்துறை சாலையில் வீரப்பன்பாளையம் அருகே சென்று கொண்டு இருந்த போது நிலை தடுமாறி பின்னால் வந்த கன்டெய்னர் லாரியில் விழுந்தனர். இதில் பின் சக்கரத்தில், வாகனத்தில் வந்த மூவரும் சிக்கினர். அனிதா லாரியின் பின்பக்க சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த மற்ற இருவரும் நல்வாய்ப்பாக சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.
பின்னர் அவர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. அனிதா லாரியின் சக்கரத்தில் சிக்கி சில அடி தூரம் இழுத்துச் செல்லப்படும் காட்சி காண்போரை பதைபதைக்க வைக்கிறது. இது குறித்து அப்பகுதி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த அனிதாவின் உடல், பிரதேர பரிசாதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. துக்க வீட்டுக்கு குடும்பத்துடன் வந்த இடத்தில் விபத்து மூலம் அனிதா உயிரிழந்தது உறவினர்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.