புதுடில்லி, :ரஷ்யாவில் இருந்து வந்த விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக வந்த தகவலை தொடர்ந்து, அந்த விமானம் புதுடில்லியில் நேற்று தரையிறக்கப்பட்டது.
ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் இருந்து ௩௮௬ பயணியருடன், ரஷ்யாவின், ‘ஏரோப்ளோட்’ நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் புதுடில்லி நோக்கி நேற்று முன்தினம் இரவு புறப்பட்டது.
விமானம் புதுடில்லியை நெருங்கிய போது, அதில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக, புதுடில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வந்தது.
உடனே, அந்த விமானத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து புதுடில்லி விமான நிலையத்தில் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
அதன்படி, அந்த விமானம் நேற்று அதிகாலை தரையிறங்கியது. அதில் வந்த பயணியர் ௩௮௬ பேர் மற்றும் பைலட் உட்பட ௧௪ விமான ஊழியர்கள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.
‘விமான நிலையத்தில்தனியாக நிறுத்தப்பட்ட அந்த விமானத்தில் நடத்தப்பட்ட சோதனையில்,வெடிகுண்டு ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை. இது வெறும் மிரட்டல் என தெரிய வந்தது’ என போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement