இல்லத்தரசிகள் ஷாக்..!! முட்டை விலை கிடு கிடு உயர்வு..!!

கோழித் தீவன மூலப்பொருட்கள் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் முட்டை விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

முட்டை ஒன்றின் நேற்றைய பண்ணைக் கொள்முதல் விலையான ரூ.4.35 ல் இருந்து 5 காசுகள் உயர்த்தி ரூ.4.40 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு அறிவித்துள்ளது.சில்லறை விற்பனையில் முட்டை ஒன்றின் விலை 5 ரூபாய் 50 பைசா வரை விற்பனை செய்யப்படுகிறது.

விலை உயர்வு குறித்து பண்ணையாளர்கள் கூறுகையில், புரட்டாசி மாதம் துவக்கத்திலேயே பண்ணைகளில் புதிதாக குஞ்சுகளை விடுவதை நிறுத்தியதால் உற்பத்தி குறைந்து தேவை அதிகரித்ததால் விலை உயர்த்தப்பட்டுள்ளதாகக் கூறினர். மேலும், வருங்காலங்களில் விலை மேலும் உயரவே வாய்ப்புள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.