பிக்பாஸ் வீட்டில் முதல் எலிமினேஷன் இவர்களில் யார்? லிஸ்ட் இதோ

பிக்பாஸ் தமிழ் சீசன் 6 விஜய் டிவியில் நல்ல டிஆர்பி ரேட்டிங்கில் ஓடிக் கொண்டிருக்கிறது. டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் முதன்முறையாக 24 மணி நேரமும் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. நிகழ்ச்சி தொடங்கி ஒரு வாரத்தை நெருங்கியிருப்பதால், வீட்டில் இருக்கும் போட்டியாளர்களில் முதல் எலிமினேஷன் யார்? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஜிபி முத்து, அமுதவாணன், மணிகண்டன் உள்ளிட்ட போட்டியாளர்கள் சூப்பராக விளையாடிக் கொண்டிருக்க, இன்னும் சிலர் விளையாடவே ஆரம்பிக்காமல் அமைதியாக மற்றவர்கள் விளையாடுவதை வேடிக்கை பார்த்து கொண்டிருக்கின்றனர்.

இந்த வாரம் முழுவதும் பிக்பாஸின் ஃபோகஸ் ஜிபி முத்து மீதே இருந்தது. அவரும் அதற்கேற்ப சூப்பரான கன்டென்டுகளை கொடுத்துக் கொண்டே இருக்கிறார். அவரும், தனலட்சுமியும் சண்டை போட்டது பிக்பாஸ் வீட்டில் மட்டுமல்லாது, சோஷியல் மீடியாவில் அனல் பறந்தது. ஒருவரையொருவர் திட்டிக் கொண்டாலும், ஜிபி முத்துவுக்கு ஆதரவாக களமிறங்கிய ஜிபி முத்து ஆர்மி, அவரை நடிக்கிறார் என எப்படி தனலட்சுமி சொல்லலாம்? ஜிபி முத்து யூ டியூப் பக்கத்தை பார்த்தால் தெரியும் அவர் நடிக்கிறாரா? இல்லையா? என வசைமாரி பொழிந்துவிட்டனர்.

நடிக்கிறார் என்ற வார்த்தையை கேட்டவுடன் கண்ணீர் விட்டு அழுது விட்டார் ஜிபி முத்து. அவர் அழுததை சக போட்டியாளர்களும், வெளியில் இருக்கும் ரசிகர்களும் மனது உடைந்து போயினர். அதேநேரத்தில் அந்தபக்கம் இருக்கும் தனலட்சுமியும் தன்னுடைய ஆதங்கத்தை கொட்டி அழுதார். இருவரின் சண்டை தான் இந்த வாரம் ஹைலைட்டாக இருக்கும் நிலையில், எலிமினேஷன் லிஸ்டிலும் இடம்பெற்றிருக்கிறார் தனலட்சுமி. அவருடன் சேர்ந்து மகேஷ்வரி, அசீம், ராம் ராமசாமி ஆகியோர் இருக்கின்றனர். இவர்களில் யார் பிக்பாஸ் வீட்டை விட்டு முதல் ஆளாக வெளியேற போகிறார் என்பது ஏறக்குறைய இன்று மாலை அல்லது இரவுக்குள் தகவல் லீக்காகிவிடும்.

அதேநேரத்தில் இந்த எலிமினேஷனில் சர்பிரைஸ் இருக்கவும் வாய்ப்பு இருக்கிறது. கடந்த முறை முதல் வார எலிமினேஷன் இரண்டாவது வாரத்தில் இருந்து தான் தொடங்கப்பட்டதால், இந்தமுறையும் அப்படி இருக்க வாய்ப்பு உள்ளதாக சிலர் கூறுகின்றனர். ஆனால் கடந்த முறை போட்டியாளர்கள் குறைவு, இந்தமுறை போட்டியாளர்கள் அதிகம் என்பதால் அப்படியான வாய்ப்புகள் ஏதும் கொடுக்கப்படாது எனவும் கூறப்படுகிறது.    

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.