புதுடில்லி, :புதுடில்லியில் கடைவீதியில் காதலியுடன் சுற்றித் திரிந்த கணவரை, அந்த இடத்திலேயே, அவரது மனைவி அடித்து துவைத்த ‘வீடியோ’ வேகமாகப் பரவியது.
புதுடில்லியில் காஜியாபாத் மார்க்கெட் பகுதி, சாதாரணமாகவே மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். பண்டிகை காலம் என்றால் சொல்லவே வேண்டாம்.
இந்நிலையில், வடமாநிலங்களில் தற்போது கர்வா சவுத் என்ற விழா கொண்டாடப்படுகிறது; இது, நம் ஊர்களில் பெண்கள் தங்களது கணவர் தீர்க்க ஆயுசுடன் இருக்கவேண்டி விரதமிருந்து கொண்டாடும் வரலட்சுமி நோன்பு போன்றது. இதனால் காஜியாபாத் மார்க்கெட்டில் நேற்று கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்தது.
இந்த மார்க்கெட்டுக்கு, தன் தாயுடன் சென்று கர்வா சவுத் விழாவுக்காக பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்த பெண், அங்கு தன் கணவர் வேறொரு பெண்ணுடன், ‘ஷாப்பிங்’ செய்துகொண்டு இருந்ததை பார்த்தார்.
உடனே அந்த பெண், பொது இடம் என்று கூட பாராமல், தன் கணவரை அடித்து துவைத்தார். இது சம்பந்தமான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
கணவன் – மனைவி இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக, மனைவி கோபித்துக் கொண்டு சமீபமாக தன் தாய் வீட்டிற்கு சென்றிருந்தார்.
இந்த வாய்ப்பை பயன்படுத்தி, கணவர் வேறொரு பெண்ணுடன் சுற்றித் திரிந்துள்ளார். இதை, மனைவி கையும் களவுமாக பிடித்து வெளுத்து வாங்கி விட்டார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement