இளவரசி டயானா மற்றும் மன்னர் சார்லஸின் ரகசிய மகள் என கூறப்பட்ட பெண்! யார் அவர்? புகைப்படங்கள்


இளவரசி டயானா – மன்னர் சார்லஸ் தம்பதியின் ரகசிய மகள் என முன்னர் கூறப்பட்ட பெண்.

Globe என்ற பத்திரிக்கை அது தொடர்பில் வெளியிட்டிருந்த செய்தி.

இளவரசி டயானா – மன்னர் சார்லஸ் தம்பதியின் ரகசிய மகள் என கூறப்பட்ட பெண் தொடர்பான தகவல்கள் குறித்து தற்போது தெரியவந்துள்ளது.
இது தொடர்பான செய்திகள் 2015 காலக்கட்டத்தில் பரபரப்பாக பேசப்பட்டன.

Globe என்ற பத்திரிக்கை தான் இந்த செய்திகளை அப்போது வெளியிட்டது.
அதன்படி டயானா – சார்லஸ் தம்பதியின் ரகசிய மகள் பெயர் சாரா என கூறப்பட்டிருந்தது.
அமெரிக்காவில் வசிக்கும் அவரை காண கேட் மிடில்டன் சென்றார் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

சாரா எப்படி பிறந்தார் என்பது தொடர்பான பின்னணியும் குழப்பம் வாய்ந்ததாக இருந்தது, ஆனால் இதை பின்னாளில் அரச குடும்ப நிபுணர்கள் மறுத்தனர்.


சாரா எப்படி பிறந்தார்?

Globe பத்திரிக்கையின் கூற்றுபடி, டயானாவுக்கு அப்போது 19 வயதிருக்கும், அந்த சமயத்தில் சார்லஸுடன் அவருக்கு திருமணம் ஆகவில்லை.
ராணி எலிசபெத் மற்றும் அரச குடும்பத்தினர், டயானாவால் சார்லஸ் மற்றும் ராஜ குடும்பத்துக்கு சந்ததிகளை கொண்டு வர முடியுமா என அறிய விரும்பினர்.

இளவரசி டயானா மற்றும் மன்னர் சார்லஸின் ரகசிய மகள் என கூறப்பட்ட பெண்! யார் அவர்? புகைப்படங்கள் | Princess Diana Charles Queen Lifestyle Uk

ASSOCIATED PRESS

அதன்படி அவரது கருமுட்டைகளை மருத்துவர்களை வைத்து பரிசோதித்தனர்.
இருப்பினும் இந்தச் செயலியில் ஈடுபட்ட மருத்துவர் ஒருவர் டயானாவின் கருமுட்டை மற்றும் சார்லஸ் விந்தணு இரண்டையும் திருடிச் சென்றார்.

பின்னர் சாராவை 9 மாதங்களுக்கு சுமப்பதற்காக வாடகை கருப்பையைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது. அதன்படி வில்லியம் பிறப்பதற்கு முன்பாகவே 1981 இல் சாரா பிறந்தார் என்று கூறப்படுகிறது.

1997 கார் விபத்தில் இளவரசி டயானா இறந்தபோது, ​​சாரா உயிருக்கு பயந்து அமெரிக்காவிற்கு தப்பி ஓடினார் எனவும் நியூ இங்கிலாந்தில் அவர் வசிக்கிறார் என கூறப்பட்டிருக்கிறது.

இந்த செய்தி வெளியிடப்பட்ட போது மிகப்பெரிய பேச்சு பொருள் ஆனது.
இதோடு தான் இறக்க வேண்டும் என சார்லஸ் கருதியதாக சாரா கூறியதாகவும் பத்திரிக்கையில் கூறப்பட்டிருந்தது.
அந்த சமயத்தில் டயானாவைப் போலவே தோற்றமளிக்கும் ஒரு இளம் பெண்ணின் படத்தை ‘குளோப்’ பயன்படுத்தியது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.