கொச்சி: நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில், தலைமை பதவிக்கான தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ராகுலுடன் பாரத் ஜோடோ யாத்திரையில் செல்லும் காங்கிரஸ் நிர்வாகிகள் வாக்களிக்க கண்டெய்னரில் வாக்குச் சாவடி அமைக்கப்பட்டு உள்ளது.
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பதவிக்கான தேர்தல் 22 ஆண்டுகளுக்கு பிறகு இன்று விறுவிறுப்பாக நடைபெற்று நடைபெற்று வருகிறது. தலைவர் பதவியை பிடிக் கட்சியின் மூத்த தலைவர்களான கார்கே, சசிதரூர் இடையே நேரடி போட்டி உள்ளது.
இந்த நிலையில், இன்று காலை 10மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியதும், வாக்களிக்க தகுதி உள்ள தலைவர்கள், மாநிலங்களின் தலைமை அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், குமரி முதல் காஷ்மீர் வரையில் பாரத் ஜோடோ யாத்திரை நடைபயணம் மேற்கொள்ளும், ராகுல்காந்தி மற்றும் அவருடன் செல்லும் காங்கிரஸ் நிர்வாகிகள், தங்களது வாக்குகளை செலுத்தும் வகையில், அவர்களுடன் செல்லும் கண்டெய்னர் லாரி ஒன்றில், வாக்குச்சாவடி அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த கண்டெய்னர் வாக்குச்சவாடி சங்கனக்கல்லில் உள்ள பாரத் ஜோடோ யாத்ரா முகாம் தளத்தில் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த வாக்குச்சாவடி இன்று காலை 10மிணிக்கு திறக்கப்பட்ட நிலையில், வாக்களிக்க தகுதியானவர்கள், தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.
இந்த வாக்குச்சாவடியானது, யாத்திரை மேற்கொள்ளும் ராகுல்காந்தியின் சந்திப்பு அறை என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக ராகுல் காந்தி தலைமையிலான பாரத் ஜோடோ யாத்திரைக்காக, கர்நாடகக மாநிலம் மோகா அருகே, ஒரு கம்பத்தில் கொடிகளை நேற்று (ஞாயிறு) நட்டியபோது , நான்கு பேர் மின்சாரம் தாக்குதலுக்க ஆளானர்கள். அவர்கள் உடனே அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அவர்களை, ராகுல் காந்தி மற்றும் கர்நாடகாவின் AICC பொதுச்செயலாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா மருத்துவமனைக்குச் சென்று பார்வையிட்டனர், அங்கு அவர்கள் குணமடைந்து வருகின்றனர், மேலும் நால்வருக்கும் கட்சி ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவியை மாநில காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.