உத்தரபிரதேச மாநில காசியாபாத் மாநகராட்சி(Ghaziabad Municipal Corporation) பகுதியில் வளர்ப்பு நாய்களால் அதன் உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் தாக்குதலுக்கு ஆளாகும் நிகழ்வு அடிக்கடி நிகழ்ந்த வண்ணம் உள்ளது.
இதனால், அபாயகரமான வகையை சேர்ந்த நாய்கள் வளர்ப்புக்கு தடை விதிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்ந நிலையில், பொதுமக்களைப் பாதுகாக்கும் வகையில் பிட்புல்(Pitbull), ராட்வீலர்(Rottweiler), டோகோ அர்ஜென்டினோ(Dogo Argentino) ஆகிய 3 வகை நாய்களை வளர்க்க இனி அனுமதியோ, உரிமமோ வழங்கப்படாது என காசியபாத் மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.
அதோடு அத்துமீறி இந்த நாய்களை வாங்கி வளர்த்தால் அபராதம் விதிக்கப்படும். பிட் புல், ராட்வீலர் மற்றும் டோகோ அர்ஜென்டினோ அல்லாத மற்ற வகை நாய்களை வளர்க்க விரும்புவோர் மாநகராட்சி அலுவலகத்தில் கட்டாயமாக அதற்கான உரிமம் பெற வேண்டும்.
பெண்கள் கல்லூரிக்குள் சுவர் ஏறி குதித்த மாணவர்கள்.. டெல்லியில் நடந்தது என்ன?
நவம்பர் 1-ம் தேதி முதல் உரிமம் வழங்கும் பணிகள் தொடங்கும் என்றும் வீட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட நாய்களை வளர்க்கக் கூடாது. பொதுவெளியில் நாயை அழைத்து செல்பவர்கள் நாயின் வாயை மூடும் உறையை கட்டாயம் அணிவிக்க் அவேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.