தைவான் பெண்ணை கரம்பிடித்த கிருஷ்ணகிரி பையன்!

இந்து முறைப்படி கோலகாலமாக திருமணம் நடைபெற்றது!

இந்தியாவைச் சேர்ந்த இளைஞர்கள் பலர் வெளிநாடுகளில் வேலை செய்து வருகின்றனர். அவர்களில் பலர் பிற நாட்டுப் பெண்களை திருமணம் செய்வது சமீப காலமாக நடந்து வருகிறது. குறிப்பாக சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, தைவான், ஜப்பான் போன்ற கிழக்கு ஆசிய நாடுகளில் இது போன்ற திருமணங்கள் நடைபெறுகிறது.

இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினத்தை அடுத்த ஆவத்துவாடி கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் ஜப்பான் பல்கலைக்கழகம் ஒன்றில் விரிவுரையாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் அதே பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் தைவானை சேர்ந்த பெண்ணுக்கும் காதல் மலர்ந்துள்ளது. இதனை இருவரும் தங்கள் வீட்டில் தெரிவித்தனர். இதனை அடுத்து இரு வீட்டால் சம்பதத்துடன் இந்து முறைப்படி காவேரிப்பட்டினம் கோட்டை பிரசன்ன வெங்கட்ராமனர் கோயிலில் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.