போபால் :வெளிநாட்டு கலாசாரப்படி ‘மனைவி மாற்று’ நிகழ்ச்சியில் பங்கேற்க சம்மதிக்காததால், மனைவியை கொடூரமாக தாக்கியவரை போலீசார் தேடுகின்றனர்.
மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு பெண் போலீசில் கொடுத்த புகாரில் கூறியிருந்ததாவது:
என் கணவர் ராஜஸ்தான் மாநிலம் பிகானீர் நகரில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலில் மேலாளராக பணிபுரிகிறார். சமீபத்தில் என்னை அந்த ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றார்.
அங்கு ஒரு அறையில் தங்க வைத்தார். இரவு நடக்கும் மனைவி மாற்று நிகழ்ச்சியில் பங்கேற்று, அதில் பங்கேற்கும் மற்ற ஆண்களுடன் பாலியல் உறவு கொள்ள வேண்டும் என கூறினார்.
நான் அதற்கு மறுத்தேன். ஆத்திரம் அடைந்த அவர், என்னை சரமாரியாக தாக்கினார். இரண்டு நாட்களாக அந்த அறையிலேயே அடைத்து வைத்து சித்ரவதை செய்தார்.
இவ்வாறு அந்த பெண் கூறியிருந்தார்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போபால் போலீசார், பெண்ணின் கணவரை தேடி வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement