இந்தியாவில் மேலும் 1946 பேருக்கு கோவிட்| Dinamalar

புதுடில்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,946 பேருக்கு கோவிட் தொற்று உறுதியாகியுள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

*இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,946 பேருக்கு தொற்று உறுதியானது.
இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,46,34,376 ஆனது.

* கடந்த 24 மணி நேரத்தில், 2,417 பேர் நலமடைந்ததால், வைரஸ் தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,40,79,485 ஆனது. தற்போது 25,968 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

* கோவிட் காரணமாக 4 பேர் மரணமடைந்ததால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,28,923 ஆக உயர்ந்தது. இந்தியாவில் இதுவரை 219.41 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.