வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஐக்கிய நாடுகள்: பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதிகளை, ஐக்கிய நாடுகள் சபையில் சர்வதேச பயங்கரவாதிகளாக அறிவிப்பதற்கு தடை விதித்து அவர்களை சீனா பாதுகாத்து வருகிறது.

லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் தலைவன் ஹபீஸ் சயீதின் மகன் ஹபீஸ் தலாக் சயீதை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கும் தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியாவும், பாகிஸ்தானும் முன்மொழிந்தன.ஆனால், அதற்கும் சீனா தன்னிடம் உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி தடுத்துவிட்டது.
கடந்த இரண்டு நாட்களில் சீனா இவ்வாறு நடவடிக்கை எடுத்தது இரண்டாவது முறையாகும். பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதியான ஷாகீத் மெக்மூத்தை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கும் வகையில், ஐ.நா.,வில் இந்தியாவும், அமெரிக்காவும் கொண்டு வந்த தீர்மானத்திற்கு சீனா முட்டுக்கட்டை போட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டில் ஜூன் மாதத்தில் இருந்து பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதிகளை பாதுகாக்கும் வகையில், ஐக்கிய நாடுகள் சபையில் அவர்களுக்கு எதிராக கொண்டு வந்த தீர்மானத்திற்கு சீனா தடை விதித்தது.

யார் இந்த ஹபீஸ் தலாக்
மும்பை பயங்கரவாத தாக்குதலில் மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீதின் மகன் தான் ஹபீஸ் ததலாக் சயீத்(46). கடந்த ஏப்ரல் மாதம் தான் அவரை பயங்கரவாதியாக மத்திய அரசு அறிவித்தது. இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில், இந்தியா மற்றும் ஆப்கனில் இந்தியர்கள் வசிக்கும் பகுதிகளில் பயங்கரவாத தாக்குதல் நடத்துவதற்கு திட்டங்கள் தீட்டுதல், நிதி சேகரித்தல் மற்றும் சதி செய்ததாக ஹபீஸ் தலாக் ஈடுபட்டதாக கூறியிருந்தது. லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் பயிற்சி மையங்களுக்கு சென்று, இந்தியா, இஸ்ரேல், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் தாக்குதல் நடத்துவது குறித்து ஆலோசனை செய்ததாகவும் கூறியிருந்தது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement