பரோலில் வந்த பாலியல் குற்றவாளி குர்மீத் ராம் ரஹீமிடம் ஆசிபெற்ற அரியானா துணைசபாநாயகர்…பலாத்கார வழக்கில் சாமியார் ராம் ரஹிம் குற்றவாளி : நீதிமன்றம் தீர்ப்பு குர்மீத் ராம் ரஹீமின் ஆசிரமத்தில் இருந்து 18 சிறுமிகள் மீட்பு: மருத்துவ பரிசோதனை! பலாத்கார சாமியாருக்கு சிறையில் தினசரி ரூ 40 சம்பளத்தில் தோட்டக்காரர் பணி…

டெல்லி: நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பாலியல் குற்றவாளியான குர்மீத் ராம் ரஹீம் பரோலில் வெளியே வந்துள்ள நிலையில், அவரை தரிசித்து ஆசி பெற பாஜகவினர் கியூவில் நிற்கின்றனர். இதுபோன்ற ஒரு நிகழ்வில், அரியானாவின் துணை சபாநாயகர், ரன்பீர் சிங் கங்வாவும் குர்மீத் ராமுக்கு  மரியாதை செய்த அவலம் நடைபெற்றுள்ளது.
2017 ஆம் ஆண்டு பாலியல் பலாத்கார வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தேரா சச்சா சவுதா தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங் மீதான புகார் உறுதி செய்யப்பட்ட நிலையில், அவருக்கு 20ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்து. இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.  இந்த நிலையில், அவரது குடும்பத்தினர் தாக்கல் செய்த விண்ணப்பத்தைத் தொடர்ந்து கடந்த வாரம் அலருக்கு 40 நாள் பரோல் வழங்கப்பட்டது.
பரோலில் வந்த பாலியல் குற்றவாளி குர்மீத் ராம் ரஹீமின் ஆன்லைன் மூலம் சபா நிகழ்ச்சி நடத்தி வருகிறார். இந்த நிகழ்ந்சியில் பங்கேற் மீண்டும் இந்துத்துவா அமைப்பினரும், பாஜகவினரும் முண்டியடித்து வருகின்றனர். ஆன்லைன் மூலம் அவருக்கு மரியாதை செய்ய கியூவில் நிற்கின்றனர்.
இந்த நிலையில், குர்மீத் ராம் ரஹீமின் ஆன்லைன் சபா நிகழ்வின்போது,  அரியான மாநில சட்டமன்ற துணைசபாநாயகர்  ரன்பீர் சிங் கங்வா கலந்துகொண்டு குர்மீத் ராமுக்கு மரியாதை செய்கிறார். இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது. பல அரியானா பாஜக தலைவர்களும் ஆன்லைன் சத்சங்கில் கலந்து கொண்டனர். ஹிசார் மேயர் கவுதம் சர்தானாவின் மனைவியும் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட குர்மீத் ராம் ரஹீம் சிங்கிடம் ஆசி பெற்றார். பல பஞ்ச் சர்பஞ்ச் வேட்பாளர்களும் தேரா சச்சா சவுதா தலைவரிடம் ஆசி பெற வந்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.