லண்டன்,
இங்கிலாந்து பிரதமராக தேர்வாகியுள்ள இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக்கிற்கு, கன்சர்வேட்டிவ் கட்சி எம்பிக்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
கன்சர்வேட்டி கட்சி தலைவராக ரிஷி சுனக் தேர்ந்தெடுக்கப்படுவதாக, இங்கிலாந்தில் பிரதமர் தேர்தல் நடத்தும் “1922 குழு” என்ற அமைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இங்கிலாந்தை பொறுத்தவரை கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவராக பொறுப்பேற்பவரே, நாட்டின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுவார். அந்த வகையில், இங்கிலாந்தின் மிக இளம் வயது பிரதமராக 42 வயதேயான ரிஷி சுனக் தேர்வாகியுள்ளார்.
இந்நிலையில், லண்டனில் உள்ள 10 டவுனிங் வீதியில் உள்ள பிரதமர் இல்லத்திற்கு வருகை தந்த ரிஷி சுனக்கிற்கு, முன்னாள் பிரதமர் லிஸ் டிரஸ் ஆரத்தழுவி வாழ்த்து தெரிவித்தார்.