சரியும் எடப்பாடி கோட்டை.. ஓபிஎஸ் – பாஜக உச்சகட்ட சூழ்ச்சி.? கைவிடும் பெரும் புள்ளிகள்..

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக ஒபிஎஸ் அணியை சேர்ந்த புகழேந்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், பொதுச் செயலாளர் பதவிக்கு ஜெயலலிதாவை தவிர வேறு யாரும் வர முடியாது. ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை கொண்டு வந்தார் முன்னாள் முதல்வர் பழனிசாமி. தற்போது பெய்து வரும் மழையால் ஸ்மார்ட் சிட்டி தண்ணீரில் மிதக்கிறது.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பழனிசாமி மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஏராளமானோர் கொள்ளை அடித்து இருக்கிறார்கள். உடனடியாக பழனிசாமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தங்கமணி மற்றும் வேலுமணி உள்ளிட்டோர் மிகப் பெரிய அளவில் கொள்ளையடித்துள்ளனர்.

தனக்கு பதவி வேண்டும் என்று யாரிடம் கேட்கவில்லை தங்கமணியே அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். ஓபிஎஸ் குறித்து தவறான தகவல்களை தங்கமணி பரப்பி வருகிறார். தங்கமணி திருந்த வேண்டும் இல்லையென்றால் களத்தில் இறங்கி திருத்த வேண்டி இருக்கும்.

தங்கமணி பதவி ராஜினாமா செய்து விட்டு அவரது நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளில் சுயேட்சை வேட்பாளராக நிற்கட்டும் அவரை எதிர்த்து ஓபிஎஸ் ஆதரவாளர்களும் நின்று இருவரும் மோதிப் பார்த்துக் கொள்ளலாம்.‌ தற்போது தமிழக அரசு பால் விலை ஏற்றத்தை விரைவாக குறைக்க வேண்டும் இல்லை என்றால் ஓபிஎஸ் தலைமையில் மிகப்பெரிய கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

எடப்பாடி பழனிசாமி உடன் இருக்கும் முக்கிய புள்ளிகள் கூடிய விரைவில் பாஜகவில் சேர தயாராக உள்ளனர். பிரிந்து இருக்கின்ற அதிமுகவினர் சசிகலா உள்ளிட்டோர் இணைந்து செயல்பட்டு அதிமுகவை வலுப்படுத்த ஓபிஎஸ் தயாராக உள்ளார் எனவும் தெரிவித்தார்.

ஈபிஎஸ் – ஓபிஎஸ் மோதல் வெடித்ததில் இருந்து ஓபிஎஸ் தரப்பினர் எடப்பாடி பழனிசாமியின் முந்தைய ஆட்சியில் ஊழல் நடந்ததாக வாக்குமூலம் கொடுத்து வருகின்றனர். அதே ஆட்சியில் இரு தரப்பும் இணைந்து செயல்பட்டதை உணராமல் ஊழல் குற்றசாட்டுகளை வைத்து வருவது தமிழக மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது. ஏற்கனவே வேலுமணி, தங்கமணி மீது பல்வேறு குற்றசாட்டுகள் உள்ள நிலையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஊழல் நடந்திருப்பதாக அதிமுகவை சேர்ந்த புகழேந்தி கூறியிருப்பதை தமிழக அரசு கண்டுகொள்ளுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும், இதுபோன்ற குற்றசாட்டுகளால் ஒட்டுமொத்த அதிமுகவுக்கே பின்னடைவுதான் என்று விமர்சனம் எழுந்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.