முக்கிய சொத்தை இழந்தார் சசிகலா?; உறவினர் செய்த நம்பிக்கை துரோகம்!

சென்னையில் உள்ள பிரபல திரையரங்கான சத்யம் சினிமாஸ் நிறுவனத்தை, ஜெயலலிதாவின் தோழி

ரூ.1000 கோடிக்கு வாங்கி இருப்பதாக கடந்த 2015ம் ஆண்டு அப்போதைய திமுக தலைவர் கருணாநிதி அறிக்கை வெளியிட்டு பரபரப்பை கிளப்பி இருந்தார்.

அந்த அறிக்கையில், ‘சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு பல பினாமி நிறுவனங்கள் இருந்தன என்று, நீதிபதி குன்ஹா தீர்ப்பிலேயே சுட்டி காட்டப்பட்டு இருந்தது.

ஹாட் வீல்ஸ் இஞ்சினீயரிங் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரை ‘ஜாஸ்’ சினிமா என்று மாற்றி, சத்தியம் சினிமா நிறுவனத்திற்குச் சொந்தமான சுமார் 600 கோடி ரூபாயில் இருந்து 1000 கோடி ரூபாய் மதிப்புடைய 11 திரையரங்குகளை ஜெயலலிதாவுடனேயே இருந்து வருகிற சசிகலாவும், இளவரசியும், அவரது உறவினர் பெயரில் வலியுறுத்தியும், மிரட்டியும் வாங்கி இருக்கின்ற செய்தி இன்று வீதிக்கு வந்துவிட்டது.

இதற்கு முன்பு தமிழகமெங்கும் ஜெயலலிதாவுடன் இருப்பவர்கள் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை வாங்கி குவித்தனர். தற்போது திரைப்பட உலகத்தை வாங்குவதற்கு திட்டமிட்டு இறங்கி இருக்கிறார்கள்.

இதே போல் கோடிக்கணக்கான மதிப்புடைய சொத்துக்களை வாங்குவதற்கு பின்னால் இருந்து முதலீடு செய்பவர்கள் யார்? அவர்களுக்கும், இவர்களுக்கும் என்ன தொடர்பு? என, கருணாநிதி கேள்வி எழுப்பி இருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில், ‘எந்த தியேட்டர்களையும் விலை கொடுத்து வாங்கவில்லை. குத்தகைக்கு மட்டுமே எடுத்துள்ளோம்’ என்று, சசிகலாவின் உறவினர்கள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

அதே சமயம், ஜாஸ் சினிமாஸ் மட்டும் இல்லாமல் மேலும் 136 தியேட்டர்களும், சசிகலாவின் கட்டுப்பாட்டில் உள்ளதாக அப்போது பரவலாக பேசப்பட்டு வந்தபோதும் அதிமுக ஆட்சியில் இருந்ததால் எந்த கவனமும் பெறவில்லை.

இச்சூழலில் சொத்து குவிப்பில் தண்டனை விதிக்கப்பட்டு சசிகலா சிறை செல்ல நேர்ந்ததால் அனைத்து சொத்துக்களும் விவேக்கின் கட்டுப்பாட்டின் கீழ் வந்ததாக கூறப்படுகிறது.

இதற்கிடையே வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி, ‘ஜாஸ் சினிமாஸை குத்தகைக்கு எடுக்க ரூ. 1000 கோடி நிதி எங்கே இருந்து வந்தது? தொழில் ரீதியாக யாரெல்லாம் கூட்டாளி?’ என்று, கேள்வி எழுப்பியதாகவும் அதற்கு விவேக், ‘வங்கியில் இருந்து கடன் வாங்கி தான் தியேட்டரை குத்தகைக்கு வாங்கியதாக விவேக் பதிலளித்ததாகவும் தகவல்கள் வெளியாகி பரபரப்பை எகிற விட்டிருந்தது.

தற்போது 4 ஆண்டு சிறை தண்டனைக்கு பிறகு வெளியே வந்த சசிகலா தனது சொத்துகள் தொடர்பாக சமீபத்தில் ஆய்வு நடத்தி இருக்கிறார். அப்போது, ஜாஸ் சினிமா நிறுவனத்தில் ஏகப்பட்ட குளறுபடிகள் இருப்பது தெரிய வந்துள்ளது.

இதுதொடர்பாக விவேக்கை அழைத்து சசிகலா விசாரித்தபோது முன்னுக்குப்பின் முரணாகவே பேசி இருக்கிறார். இதனால் என்ன செய்வது? என, சசிகலா குழம்பி தவித்தபோது நிறுவனத்தை யாரிடமாவது கைமாற்றி விடலாம். இல்லையென்றால் மீண்டும் கணக்குகளை தோண்டி துருவி அமலாக்க துறையோ அல்லது வருமான வரித்துறையோ நெருங்கும்’ என ஆலோசனை வழங்கி உள்ளனர்.

இதனால் வேறு வழியின்றி விற்பனை செய்ய சரியான ஆள் தேடியபோதுதான் விற்பனை செய்த நிறுவனமே, திரும்ப வாங்கிக்கொள்ள ஆர்வம் காட்டியதாகவும், இதை தொடர்ந்தே உடனடியாக நிறுவனம் விற்பனை செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

ஆசை ஆசையாக வாங்கிய பல நூறு கோடி ரூபாய் மதிப்புடைய நிறுவனத்தை சிறைக்கு செல்லும் முன்பாக நம்பி ஒப்படைத்து சென்ற நிலையில், அதை உறவினர் ஆட்டையப் போட்டதால் தற்போது இழக்கும் நிலை வந்துவிட்டது என, உறவினர்கள் சொல்லி வருத்தப்படுகின்றனர். இந்த தியேட்டரில் தான், சமீபத்தில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ‘பொன்னியின் செல்வன்’ படம் பார்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.