பிரிட்டனிடம் இருந்து இந்தியா சுதந்திரம்பெற்ற பின்னர் நடைபெற்ற முதலாவது தேர்தலில் வாக்களிப்பில் முதன் முறையாகக் கலந்துகொண்டவர் என அடையாளப்படுத்தப்படும் Shyam Saran Negi காலமானார்.
இவர் அன்றிலிருந்து ஒவ்வொரு தேர்தலிலும் வாக்களித்துள்ளார்.
இவரே இந்தியப்பொதுத் தேர்தலில் முதன் முறை அன்று முதலாவது வாக்காளராக வாக்களித்தார். நேற்று காலமான இவர், ஹிமாச்சல்பிரதேசத்திற்கான தேர்தலில் இவ்வாறு வாக்களித்துள்ளார்.
ஓய்வுபெற்ற ஆசிரியரான இவர்,இந்தியாவில் 1951ம் ஆண்டு நடைபெற்ற முதலாவது தேர்தல், இவர் சார்ந்த பிரதேசதேர்தல் 5 மாதங்களுக்கு முன்பதாக நடைபெற்றுள்ளது. அக்காலப் பகுதியில் ஹிமாச்சல்பிரதேசத்தில் பனிக்கால நிலை காரணமாக 5 மாதங்களுக்கு முன்னதாக தேர்தல் நடைபெற்றுள்ளது.