பெங்களூரு:அனுமதி இல்லாமல், கே.ஜி.எப்., – 2 கன்னட படத்தின் பாடலை பயன்படுத்தியதால், காங்கிரசின் டுவிட்டரை ‘பிளாக்’ செய்யும்படி, பெங்களூரு நீதிமன்றம் உத்தரவிட்டது.
காங்., – எம்.பி., ராகுல் தலைமையில், கர்நாடகாவில் பாரத் ஜோடோ யாத்திரை நடந்தபோது, கே.ஜி.எப்., – 2 படத்தின் பாடல் இசையை, காங்., கட்சி பிரசாரத்துக்கு மாற்றி பயன்படுத்தினர். இதற்கு முறைப்படி அனுமதி பெறவில்லை.
இது குறித்து, யஷ்வந்த்பூர் போலீஸ் நிலையத்தில், படக்குழுவினர் புகார் செய்தனர். பெங்களூரு நகர நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தனர்.
விசாரணை நடத்திய நீதிமன்றம், காங்கிரசின் டுவிட்டர் கணக்கை, நவம்பர் 21 வரை ‘பிளாக்’ செய்யும்படி, டுவிட்டர் நிறுவனத்துக்கு நேற்று உத்தரவிட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement