புதுடில்லி: ஜி-20 மாநாட்டில், பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று இந்தோனேஷியா சென்றடைந்தார்.
தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியாவின் பாலி தீவில், ‘ஜி- – 20’ மாநாடு நாளை (நவ.,15) மற்றும் நாளை மறுநாள் ( நவ.,16) ஆகிய இரு நாட்களில் ஜி-20 உச்சி மாநாடு நடைபெறுகிறது. இதில் பங்கேற்க இன்று பிரதமர் நரேந்திர மோடி இந்தோனேஷியா சென்றடைந்தார். பாலி சென்றடைந்த அவரை அந்நாட்டு அரசு உயரதிகாரிகள், தூதரக அதிகாரிகள் வரவேற்றனர்.
இம்மாநாட்டின் போது வளர்ந்து வரும் உலகளாவிய வளர்ச்சி, உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பு, சுற்றுச்சூழல், சுகாதாரம் மற்றும் டிஜிட்டல் உருமாற்றம் உள்ளிட்ட பல முக்கிய சர்வதேச விவகாரங்கள் பற்றி ஜி-20 தலைவர்களுடன் விரிவாக ஆலோசனை மேற்கொள்ளவும், பல நாட்டு தலைவர்களையும் நேரில் சந்தித்து பேச உள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement